Thursday 28 December 2017

சட்டவிரோதமாக மணல் அகழ்வில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒன்பது வாகனங்களை கரடியனாறு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பில் இன்று (28) 5 உழவு இயந்திரங்கள் மற்றும் 4 டிப்பர் வண்டிகளும் பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களாகக் கைதுசெய்யப்பட்ட இவ்வாகனங்களின் சாரதிகள் ஒன்பது பேரும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதிபதி வினோபா இந்திரன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து, குறித்த நபர்களை எதிர்வரும் 2018 ஜனவரி மாதம் 05 ஆம் திகதி  நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது.

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தன்குமாரவெளி மற்றும் புத்தம்புரி ஆகிய இடங்களில் வாவிக்குள் மணல் அகழ்ந்த குற்றச்சாட்டின்பேரில் 08 வாகனங்களும் அனுமதிப்பத்திரத்தில் குறிக்கப்பட்ட இடத்தைவிட்டு வேறுஇடத்தில் மணல் அகழ்ந்த குற்றச்சாட்டின்பேரில் மற்றுமொரு வாகனமும் கைப்பற்றப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

கரடியானாறு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து குறித்த பிரதேசத்தில் பதுங்கியிருந்து, இச்சட்டவிரோத நடவடிக்கையினை முறியடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
haran

No comments: