Thursday 22 June 2017

ஆலையடிவேம்பு பிரதேச காணி பயன்பாட்டுக் குழுவின் ஒன்றுகூடல்




ஆலையடிவேம்பு பிரதேச காணி பயன்பாட்டுக் குழுவின் விசேட ஒன்றுகூடலானது அதன் தலைவரும், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருமான வி.ஜெகதீஸன் தலைமையில் இன்று (23) காலை இடம்பெற்றது.

இதில் புவிச் சரிதவியல் அளவை சுரங்க பணியகம், இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களம், வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம், மத்திய சூழல் அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, நில அளவைத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் விவசாயத் திணைக்களப் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

அதில் சின்னப்பனங்காடு, புளியம்பத்தை கிராமத்தில் அமையப்பெற்ற மிருக வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள அரச காணியைப் பாரம்பரிய நாட்டு வைத்தியத்துக்குத் தேவையாகவுள்ள மூலிகைச் செடிகளைப் பயிரிடும் வகையில் மூலிகைத் தோட்டத்தை அமைப்பதற்காக வழங்குதல், அக்கரைப்பற்றில் அமையவுள்ள பிரதேச நில அளவைக் காரியாலயத்துக்காக பொத்துவில் வீதி, இராணுவ முகாமுக்கு அருகாமையில் காணியொன்றை ஒதுக்குதல் என்பன தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதுடன், கண்ணகிகிராமம் – 2 கிராம சேவகர் பிரிவிலுள்ள மலையுடன் கூடிய காணியை பொதுமக்களின் கிரனைட் வளத் தேவையினை பூர்த்திசெய்யும் பொருட்டு அகழ்ந்தெடுப்பதற்காக நீண்டகாலக் குத்தகைக்கு வழங்குவதால் ஏற்படக்கூடிய சூழல், சுகாதார, சமூகப் பிரச்சனைகள் தொடர்பாகவும் அங்கு விரிவாக ஆராயப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தை காணிப் பயன்பாட்டுக் குழுவின் செயலாளரும் பிரதேச செயலக காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் உத்தியோகத்தருமான ஜி.கலாரஞ்சன் ஒழுங்கு செய்திருந்தார்.











No comments: