Friday 6 January 2017

கண்ணகிகிராமத்தில் வாழ்வாதார உதவியாக ஆடுகள் வழங்கிவைப்பு


சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ளக இடம்பெயர்ந்த மற்றும் மீளக்குடியமர்ந்த அகதிகளுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்ணகிகிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான ஆடுகளைப் பகிர்ந்தளிக்கும் முதற்கட்ட வைபவம் நேற்று (05) மாலை இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் இடம்பெற்ற குறித்த வைபவத்தில் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பண்ணைகளிலிருந்து தருவிக்கப்பட்ட குறித்த கால்நடைகள் அக்கரைப்பற்று அரச கால்நடை வைத்திய அதிகாரி எம்.ஐ.ரிப்கானின் மேற்பார்வையோடு 6 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கிவைக்கப்பட்டன.

அங்கு கருத்துத் தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், குறித்த திட்டத்தின் இரண்டாம் கட்ட உதவிகளை வழங்கும் வேலைகள் இம்மாதத்திலேயே எதிர்வருகின்ற நாட்களில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்தார்.










No comments: