Tuesday 27 September 2016

ஆலையடிவேம்பில் வீடமைப்பு உதவியாக சீமெந்துப் பொதிகள் வழங்கிவைப்பு


வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினூடாக சீமெந்துப் பூச்சு வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் வறிய குடும்பங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான சீமெந்துப் பொதிகளை வழங்கிவைக்கும் இரண்டாம் கட்ட வைபவம் இன்று (27) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் என்.சுதர்சனால் பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் தலா 10 பொதிகள் வீதம் 38 பேருக்கும்,  தலா 5 பொதிகள் வீதம் 4 பேருக்குமாக மொத்தம் 42 பயனாளிகளுக்கு 400 சீமெந்துப் பொதிகள் பகிந்தளிக்கப்பட்டன.

இதில் உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் கே.நேசராஜா, கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ மற்றும் நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த வேலைத்திட்டத்தின் முதலாங்கட்ட சீமெந்துப் பொதிகள் ஏற்கனவே கடந்த மே மாதத்தில் குறித்த பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.











No comments: