Thursday 26 December 2013

கர்ப்பிணித் தாய்மாருக்கான கருத்தரங்கு"

ஆலையடிவேம்பில் நடைபெற்ற கர்ப்பிணித் தாய்மாருக்கான கருத்தரங்கு"

முன்பள்ளி அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மாருக்கான போஷாக்குணவு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த 23-12-2013, திங்கட்கிழமை ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரியின் பணிமனையில் நடைபெற்றது.

Photo Photo


இக்கருத்தரங்கிற்கு வளவாளராக ஓய்வுபெற்ற மாவட்ட வைத்திய அதிகாரி திருமதி.சித்திரா தேவராஜன் கலந்துகொண்டு கர்ப்பிணித் தாய்மார் கைக்கொள்ளவேண்டிய போஷாக்குமிக்க உணவுவகைகள், சுகாதாரப் பழக்கவழக்கங்கள், கர்ப்பகால வியாதிகளிலிருந்து பதுகாப்புப்பெறல் தொடர்பான பல்வேறுபட்ட கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

இதில் 52 கர்ப்பிணித் தாய்மார்கள், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரியின் காரியாலயத்தில் பணியாற்றும் 10 பொதுச்சுகாதார மருத்துவமாதுகள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலிருந்து உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.திலகராணி கிருபைராஜா, முன்பிள்ளைப்பராய அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், உளவளத்துணை உதவியாளர் ஏ.எம்.சப்றினா ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments: