Monday 18 November 2013

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றவர்களுக்கு 90 ஆயிரம் ரூபா அபராதம்


அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக மின்சாரம்பெற்று வந்தநிலையில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேருக்கு 90 ஆயிரம் தண்டப்பணம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

இதேவேளை கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரட் வைத்திருந்த பெண்ணொருவர் உட்பட எட்டுப் பேருக்கும் ரூபா 32,700 தண்டப்பணம் விதிக்கபட்டதுடன் இன்று ஆஜராகாத ஒருவருக்கு பிடி ஆணை பிறப்பித்து நீதவான் ரீ.சரவணராஜா தீர்ப்பளித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸாருடன் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று வந்த குறித்த ஒன்பது பேரும் ஞாயிற்றுக்கிழமை (20) கைதுசெய்யப்பட்டதுடன் இவர்கள் திங்கட்கிழமை (21) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படடனர்.

மேலும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் சார்ஜன் யூ.எல்.ஆப்தீனின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சட்ட விரோத சிகரெட் மற்றும் கஞ்சா வைத்திருந்த ஒன்பது பேரும் நேற்று கைதுசெய்யப்படதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இவர்களை திங்கட்கிழமை (21) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய இத்தண்டப்பணம் அறவிட்டு நீதவான் தீர்ப்பளித்தார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், ஒலுவில் மற்றும் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றவர்களுக்கு 90 ஆயிரம் ரூபா அபராதம்

No comments: