Wednesday 26 February 2020

நிலக்கடலை அறுவடை

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தினால் மாவட்டத்தின் பல கிராமங்களிலும் நிலக்கடலை செய்கை ஊக்குவிக்கப்பட்டு தரமான விதை உற்பத்தி நடைபெற்று வருகின்றது. அதன் ஒருகட்டமாக பழுகாமம் விவசாய விரிவாக்கல் நிலையத்தின் கீழுள்ள திக்கோடை விவசாய போதனாசிரியர் பிரிவின் தும்பானை கிராமத்தில் நிலக்கடலை அறுவடை விழா நேற்று நடைபெற்றது.


விவசாய போதனாசிரியர் எஸ்.சசிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் ரீ.மேகராசா அதிதியாக கலந்து கொண்டதுடன் விவசாய போதனாசிரியர்கள் தொழிநுட்ப உதவியாளர்கள் கமநல அமைப்புக்கள் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.  தரமான விதை உற்பத்தியின் சிறந்த நடைமுறைகள் அதன் மூலம் கிடைக்கும் இலாபம் என்பன பற்றி விவசாய போதனாசிரியரால் தெளிவூட்டப்பட்டதுடன் அறுவடை செய்யப்படும் விதைக்கான நிலக்கடலை முழுமையாக தரத்திற்கேற்ற அறுவடைக்கு பின்னான நடைமுறைகளை பின்பற்றுவதனூடாக விவசாய திணைக்கள பண்ணையினால் உயர் விலையில் கொள்வனவு செய்யப்படுமெனவும் விளக்கமளிக்கப்பட்டது.






திக்கோடையில் தரமான விதை உற்பத்தி நிலக்கடலை அறுவடை விழா ! Rating: 4.5 Diposkan Oleh: Dicksith
haran

No comments: