Monday 19 August 2019

அடிப்படைத் திறன் அபிவிருத்தி




(ரவிப்ரியா)

அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பணித்தளத்திலான அடிப்படைத் திறன் அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறை சார்பான விருந்தோம்பல் பயிற்சியின் முதற்கட்டத்தை பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ட்ரீட்டு விடுதியில் வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத் தலைவர் எம்.எச்.எம். நளீம் தலைமையில் வெள்ளியன்று காலை (16)நடைபெற்றது, பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் உதயகுமார் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதியாக, உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்  குழு தலைவர் (அவுஸ்திரேலியா) டேவிட் ஆப்லெட்டும், விசேடஅதிதியாக இலங்கை வர்த்தக சம்மேளன செயலாளர் நாயகம் அஜித் டி பெரேராவும். உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரனும் கலந்துகொண்டனர்.;

சம்பிரதாயபூர்வமாக அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து. தலைவரின் வரவேற்புரை,  நடனம்  என்பன இடம்பெற்று அதிதிகள் உரையும் இடம் பெற்றது. 

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி விவசாயத்திலும் மீன்பிடியிலுமே தங்கியிருக்கின்றது. எனவே திட்டமிடுவோர் மேற்படி துறைசார்ந்தே திட்டமிடலை மேற்கொள்ளுகின்றனர். நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் சுற்றுலாதுறை முக்கிய இடத்தைப் பிடித்துவருகின்றது. அது இலங்கையில் நல்ல வளர்ச்சி பெற்று வருகின்றது. 

மட்டக்களப்பு சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவரக் கூடிய இயற்கை எழில் மிக்க பிரதேசம். எனவே இங்கு சுற்றுலாத்துறை விவசாயம் மீன்பிடி தவிர்த்து முக்கிய மூன்றாவது துறையாக நாம் இதை வளர்த்தெடுக்க வேண்டும்.

இளைஞர் யுவதிகள் தனியே அரச வேலைகளில் மட்டும் நாட்டம் கொள்ளாமல் சுற்றுலாத் தறையிலும் பிரவேசிப்பதன் மூலம் எமது மாவட்டபொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்ல உங்களின் சுய பொருளாதார விருத்திக்கும் அது பெரிதும் உதவும்.

எமது மாவட்டத்தில் 96க்கு மேற்பட்ட சுற்றுலா ஹோட்டல்கள் இருக்கின்றன.  நாட்டில்அசம்பாவிதம் நடைபெற்று சுற்றலாத்தறை வீழ்ச்சியுற்றிருந்த நிலையில் இப் பயிற்சி நடைபெற்றது விசேட அம்சமாகும். அத்துடன் இங்குபணிபுரிந்தோருக்கு நல்ல வாய்ப்பாகவும் அமைந்தது.

ஹோட்டல்கள் பாதிப்புறா வண்ணம் பயிற்சியாளர்கள் உள்வாங்கப்பட்டு அவர்களின் அறிவு, திறன், மனப்பாங்கை வளர்ப்பதற்கானமுயற்சியாக இப்பயிற்சி நடைபெற்றுள்ளது.. விருந்தோம்பல் என்பது அத்துறைக்கு மிகவும் அத்தியாவசியமானது. அதை நீங்கள் பெற்றுள்ளமையானது நிச்சயம் உங்கள் எதிர்காலத்தை பிரகாசிக்கச் செய்யும். இது உங்களக்கு நல்ல சர்ந்தர்ப்பம். என தெரிவித்தார். இதுநல்லதொரு மிகப்பெரிய திட்டமென பாராட்டுத் தெரிவித்தார். இதை ஒழுங்கமைத்த சம்மேளனமும் இதில் பங்கெடுத்த உத்தியோகத்தர்களின் பங்களிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. என்று மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை. பொலன்நறுவை ஆகிய நான்கு மாவட்டங்களில் இப்பயிற்சி நெறி கடந்த வருடம் செப்ரம்பர் மாதமளவில்  நான்கு மாவட்டங்களிலும் எமது நிதி உதவியுடன் ஏககாலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் நான்கு மாவட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்டமே முன்னிலை வகிப்பது மகிழ்ச்சி தரும் விடயமாகும் இதன் மூலம் இந்தவர்த்தக சம்மேளனம் ஒரு மைல் கல்லை தாண்டியுள்ளது. அதற்காக நாம் இவர்களை வெகுவாகப் பாராட்டுகின்றோம்.

இங்கு இடம்பெற்ற அசாதரண சூழ் நிலையால் இந்த பயிற்சி நெறியானது தடைப்பட்டுவிடுமோ என நாம் அச்சமடைந்திருந்தோம். எனினும்திட்டமிட்டபடி இந்த பயிற்சியின் முதற் கட்டம்  முடிவுக்கு வந்துள்ளதானது ஒரு சாதனையே. அதற்காக உழைத்த பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் கே.குகதாஸ், வழிப்படுத்துனர்கள். ஆகியோருக்கு நாம் நன்றியடையவர்களாக இருக்கின்றோம்.

மெற்கண்டவாறு உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன் (எஸ்4ஐஜி) குழு தலைவர் (அவுஸ்திரேலியா) டேவிட் ஆப்லெட் தனது உரையில்குறிப்பிட்டார்.  

சான்றிதழ்களை 105 பணித்தள பயிலுனர்களும். 8 வழிப்படுத்துனர்களும், மற்றும் 74 பணித்தள பயிற்சியாளர்களும் பெற்றுக் கொண்டனர்.அத்துடன் ஹொட்டல் சிறந்த செற்பாட்டாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இப்பயிற்சிக்கான நான்கு பாடநெறிகளை உள்ளடக்கிய முதலாவது கட்டமே 2018 செப்ரம்பரில் ஆரம்பிக்கப்பட்டு தற்போதுமுடிவடைந்துள்ளது. மொத்தமாக 14 பாடநெறிகளை உள்ளடக்கி இப்பயிற்சிநெறியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்துபாடநெறிகளையும் பூர்த்தி செய்வோர் தேசிய தொழில் பயிற்சி சான்றிதழ் 2க்கான தகைமையை அடைவார்கள். என பயிற்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கட்டம் கட்டமாக 96 ஹோட்டல்களைச் சேர்ந்த 384 பணித்தள பயிலுனர்களுக்கு பணித்தளத்திலேயே தொடர்ந்து பயிற்றியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.






















சுற்றுலாதுறை பணித்தளத்திலான அடிப்படை திறன் அபிவிருத்திப் பயிற்சிநெறியில் ஒரு மைல் கல்லை தாண்டியது மட்டக்களப்பு Rating: 4.5 Diposkan Oleh: Team New

No comments: