Sunday, 17 June 2018

சீரற்ற கால நிலை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

 களுவாஞ்சிக்குடி  பகுதியில் இன்று 17 ஏற்பட்ட சீரற்ற கால நிலை காரணமாக கோட்டைக்கல்லாறு பகுதியை சேர்ந்த மீனவர் ஆற்றிலிருந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி கோட்டைக்கல்லாறு பகுதி மக்கள் தெரிவித்திருந்தார்
.

சம்பவம் தொடர்பாக  களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் வினவிய போது மேற்படி சம்பவமானது இன்று மதிய வேளையில் பின்னர் காலநிலை சீரற்ற நிலையில் நிலவகின்றது அந்தவகையில் மீன் பிடிக்காக சென்றிருந்த 39 வயதுடைய ஆர். இராஜகுமார் என்ற நபர் கோட்டைக்கல்லாறு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பிரதேச மக்களினால் இனங்காணப்பட்டுள்ளார். ஆற்றில் அடித்திச் செல்லப்பட்ட நபர் கண்டுபிடிக்கப்படவில்லை பொலிஸார் கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றனர் என களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
haran

No comments: