Tuesday, 5 June 2018

ஜனநாயகப் போராளிகள் கட்சி

haran
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான தலைமைக் காரியாலயம் இன்று (05) வெல்லாவெளி பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.


ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நா.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் உறுப்பினர்கள், மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேச சபை உறுப்பினர்கள், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர், ஊடகப் பேச்சாளர் துளசி, பரப்புரைச செயாளர் பிளிப்ஸ், இராசமாணிக்கம் அறக்கட்டளையின் தவிசளர் இரா.சாணக்கியன், மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளரினால் கட்சி தலைமைக் காரியாலம் திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதற் தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமார் அவர்களின் 44வது நினைவஞ்சலி நிகழ்வும் இதன்போது உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


















ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறப்பு Rating: 4.5 Diposkan Oleh: Battinews batticaloa

No comments: