Monday, 26 February 2018

யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு

haran
(சகா )

அம்பாறையைடுத்துள்ள வளத்தாப்பிட்டியில் அண்மைக்காலமாக இரவானால் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துவருகிறது.


அதனால் இரவானால் மக்கள் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு பொழுதைக்கழிக்கவேண்டிய நிலையிலுள்ளதாக வளத்தாப்பிட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் த.காந்தன் கவலையோடு கூறுகிறார்.

சனிக்கிழமை (24) கிராமத்திற்குள் புகுந்த யானைகள் அங்கு மக்களின் குடிசைகள் அவர்களது ஜீவனோபாயத்திற்கான பயிர்பச்சைகளை துவம்சம் செய்துள்ளன.

ஏழை மக்களது வாழ்விடங்களான ஓலைக்குடிசைகள்  தகரக்கொட்டில்களை அவை பதம்பார்த்துள்ளது. அவர்களது தென்னம்பிள்ளைகளின் குடலை உருவி சேதப்படுத்தியுள்ளன. மரக்கறிப் பயிர்ச்செய்கையை சேதப்படுத்தியுள்ளன.

வேளாண்மை அறுவடை முடியும் காலமென்பதால் யானைகள் வரத்தொடங்கியுள்ளன. இதனைக்கட்டுப்படுத்த வனஜீவராசிகள் திணைக்களம் உரிய வேளையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.








No comments: