இதன்போது சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதுடன் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான தடைசெய்யப்பட்ட வலைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
நாவலடி, வலையிறவு, கல்லடி பகுதிகளிலுள்ள வாவிகளில் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் நேற்று (புதன்கிழமை) சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட வலைகளை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் கையளிக்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை சட்டவிரோத வலைகளைக்கொண்டு மீன்பிடிப்பதால் பல வகையான மீனினங்கள் அழிந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
haran
No comments:
Post a Comment