Monday, 18 June 2018

வேலியிட சென்றவர்கள் மீது தாக்குதல்

அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில்  காணியில் வேலியிட சென்றவர்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்ட  சம்பவம்     இடம்பெற்றுள்ளது




ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட  
அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் தங்களுக்குச் சொந்தமான காணி என தெரிவித்து  வேலியிட சென்ற 06 பேர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்  நேற்று (18) அவர்களின் மோட்டார் சைக்கிள்களும் நாசப்படுத்தப்பட்டுள்தை தொடர்ந்து இன்று அப்பகுதியில்  பதட்டமான சூழ்  நிலை தொடர்கின்றது 

குறித்த காணி விடயம் தொடர்பில் பிரதேச சபை  தவிசாளர்  க.பேரின்பம்  கருத்து தெரிவிக்கையில் பெயர் பலகையை    இந்த காணியுடன் எமது பிரதேசத்தில் காணப்படுகின்ற பிரதேச சபையால் களப்பு முகாமைத்துவப் பிரதேசமாக அடையாளபடுத்தப்பட்ட சதுப்பு நிலமென்று அழைக்கப்படுகின்ற பகுதிகளை  "கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள சட்டம் ( 2009 ஆகஸ்ட் 13 இலக்கம் 1614/19 கீழ் மீனவ முகாமைத்துவ பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது )" சட்டத்தின் பிரகாரம் அடையாளப்படுத்தும் படி எமக்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் அவற்றினை எல்லைப்படுத்தி அடையாளமிட்டு குறித்த அறிவித்தல் பலகை பிரதேச சபையின் அனுசரணையில்  இடப்பட்டது 
இந்த நிலையில் அந்த அறிவித்தல் பலகையினை சேதப்படுத்தியவர்கள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் நேற்று சம்பவம் தொடர்பில் தாம் அக்கரைப்பற்று பொலிசாரிடம் சென்றபோது காலதாமதமாகவே சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த நிலைமை தொடர்பில் தாம் தமது தரப்புடன் சட்ட ஆலோசனை மேற்கொண்டுவருவதாகவும் இது தொடர்பில் பிரதேச செயலகம் உடன் இணைந்து ஒரு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க உள்ளதுடன் பொதுமக்கள்  தயவு செய்து  அமைதியினை கடைப்பிடிக்குமாறும்   பிரதேச சபை தவிசாளர்  க.பேரின்பம் மேலும் தெரிவித்தார்  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.






 வெளியிட்டிருக்கும்  துண்டுப்பிரசுரம்,,,





haran

No comments: