கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் 2000 வருடங்கள் பழைமை வாய்ந்த திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிசேக நிகழ்வானது 15 வருடங்களின்பின் எதிர்வரும் 25.06.2018இல் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
கடந்த 2015 இன் கடைக்கூற்றில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. 15வருடங்களுக்குப்பிறகு எதிர்வரும் 25 ஆம் திகதி மகாகும்பாபிசேகம் நடைபெறவுள்ளது.அம்பாறை மாவட்டத்திலே முதன்முதலாக 17குண்டங்களைக்கொண்டு மகா கும்பாபிசேகமொன்று நடைபெறவிருப்பது இதுவே முதற்தடவையாகும் என ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ. சண்முக மகேஸ்வரக்குருக்கள் தெரிவித்தார்.
ஆலயநிருவாகம் பிரதம குருக்கள் சிவஸ்ரீ.சண்முக மகேஸ்வரக் குருக்களின் ஆலோசனையில் மகா கும்பாபிசேகம் செய்ய திருவருள் கூடியுள்ளது.
எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.35மணி முதல் 10.25மணி வரையான சுபவேளையில் கும்பாபிசேக பிரதமகுரு சிவாகம வித்தியாபூசணம் விபுலமணி. சிவஸ்ரீ. சண்முகமகேஸ்வரக் குருக்கள் தலைமையில் மகாகும்பாபிசேக குடமுழுக்குப் பெரும் சாந்தி பெருவிழா நடைபெறவுள்ளது.
கடந்த 2015 இன் கடைக்கூற்றில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. 15வருடங்களுக்குப்பிறகு எதிர்வரும் 25 ஆம் திகதி மகாகும்பாபிசேகம் நடைபெறவுள்ளது.அம்பாறை மாவட்டத்திலே முதன்முதலாக 17குண்டங்களைக்கொண்டு மகா கும்பாபிசேகமொன்று நடைபெறவிருப்பது இதுவே முதற்தடவையாகும் என ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ. சண்முக மகேஸ்வரக்குருக்கள் தெரிவித்தார்.
ஆலயநிருவாகம் பிரதம குருக்கள் சிவஸ்ரீ.சண்முக மகேஸ்வரக் குருக்களின் ஆலோசனையில் மகா கும்பாபிசேகம் செய்ய திருவருள் கூடியுள்ளது.
கும்பாபிசேகத்திற்கான யந்திர பூசைகள் யாவும் மே 5இல் கோலாகலமாக ஆரம்பமாகியது. தொடர்ந்து எதிர்வரும் 18 இல் கர்மாரம்பத்துடன் கிரியைகள் ஆரம்பமாகும். 18ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை காலை 8மணி முதல் கும்பாபிசேகத்திற்கான முன்னோடிக் கிரியைகள் நடைபெறும்.
23ஆம் திகதி காலை 7.00மணி முதல் 24ஆம் திகதி மாலை 5.00மணிவரை எண்ணெய்க்காப்புசாத்தும் நிகழ்வு நடைபெறும் எனவும்

ஆரம்பத்தில் 23.10.1828ம் திகதி மீனலக்ன சுபவேளையில் குடமுழுக்குப் பெற்றதாக அறியமுடிகிறது. காலந்தோறும் ஆலய திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு புனராவர்த்தன மகா கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன. இறுதியாக 12.06.2003 அன்று நடைபெற்றது.
அதன்பின் 15வருடங்களின் பின்பு தற்போது நடைபெற விரிவான ஏற்பாடுகளைச் செய்து பூர்த்தியடைந் திருப்பதாக ஆலய பரிபாலனசபையின் தலைவர் சு.சுரேஸ், செயலாளர் எ.செல்வராஜா மற்றும் ஆலய வண்ணக்கர் திரு. வ.ஜயந்தன் ஆகியோர் தெரிவித்தனர்.
23ஆம் 24ஆம் 25ஆம் திகதிகளில் அன்னதானம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கும்பாபிசேக செயற் குழுத்தலைவர் க.பாஸ்கரன் தெரிவித்தார்.
கிழக்குமாகாண உதவி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி. வி.இராஜகோபாலசிங்கம் தலைமையிலான குழுவினரின் ஆலோசனையின்பேரில் புனருத்தாரண வேலையை முன்னெடுக்க 27பேர் கொண்ட திருப்பணிச்சபையொன்று சி.சதீஸ்குமார் தலைமையில் திருக்கோவில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜனைக் காப்பாளராகக் கொண்டு அமைக்கப்பட்டு தற்போது ஆலயம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

ஆகம விதிகளுக்கும் சிற்பவிதிமுறைகளுக்கமைவாகவும் சிற்பங்கள் பொம்மைகள் அமைக்கின்ற பணிகளை அனுபவம் வாய்நத சிற்பாச்சாரியார் முருகேசு வினாயகமூர்த்தி லுகன், ரகு, மகேஸ்வரன் மற்றும் வர்ணம் தீட்டுதலில் புகழ்பெற்ற ஓவியர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் மேற்கொண்டுவந்தனர்.
மூலஸ்தாபன கருவறை பிரகாரக்கோயிலான பிள்ளையார் வசந்தமண்டபம் நவக்கிரகம் சண்டேசுவரர் ஆலய புனருத்தாரணம் என்பன ஆலய நிருவாகத்தினர் மற்றும் பஞ்சயாத்துசபையினரின் நேரடிப்பங்களிப்பிலே நடைபெற்றன

No comments:
Post a Comment