ஆர்.நடராஜன்
கும்பாபிஷேகத்தில் முக்கிய நிகழ்வான தூபி அபிஷேகத்தின் போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசித்த வேளை பெண் பக்தர்கள் அணிந்திருந்த தங்க நகைகள் திருடர்களால் அபகரிக்கப்பட்டுள்ளது .
இது பற்றி மேலும் தெரியவருவதாவது இன்று 17ம் திகதி அம்பாறை அக்கரைப்பற்று , கோளாவில் - 03, ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இடம் பெற்றுக்கொண்டிருந்த வேளை பக்தர்கள் கிரியைகளில் கலந்து கொண்டிருந்தனர் அப்போது பிரதான விமான தூபி அபிஷேகத்துக்காக குருமார் நிறை கலசத்தினை எடுத்துக்கொண்டு படி எறிச்சென்று சுப நேரத்தில் புனித நீர் நிரப்பப்படட கலசம் மந்திர உச்சாடனங்களுடன் நீர் கலசத்தின் மீது சொரியப்படுகின்றது .
இந்த வேளையில் பக்தி ததும்பி மெய் மறந்த பக்தர்கள் அரோகரா சத்தமிட்டு இறைவனை துதிபாடி வணங்குகின்ற போது ஒரு பெண்ணின் கையினை இன்னொருவர் பிடித்து இழுத்து காப்பு அபகரிக்கப்பட்ட்டதை உணர்த்த அப் பெண் கூச்சல் இட்ட போதே பக்தர்கள் சுய நினைவுக்கு வந்துள்ளனர் .
அதன் பின்னர் ஏனைய பெண்களும் தமது தங்க நகைகளை சரி பார்த்தபோது தாம் அணிந்திருந்த மலைகள் அபகரிக்கப்படுள்ளத்தை உணர்ந்துள்ளனர்
haran
No comments:
Post a Comment