மாட்டு எருவிற்குள் மறைக்கப்பட்டு கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மடிக்கி பிடிப்பு. செங்கலடி மாவடிஓடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மரக்குற்றிகள் கைப்பெற்றப்பட்டது.
டிப்பர் வாகனத்தில் மாட்டு எருவிற்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்ட சுமார் 20 தேக்கை மரக்குற்றிகள் மாவடிஓடை பிரதேசத்தில் வைத்து இன்று பி.ப 2.00 மணியளவில் இலுப்படிச்சேனை வட்டார வனவள காரியாலய அதிகாரிகளினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.
தமக்கு கிடைத்த திடீர் தகவலுக்கு அமைய இச் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு சட்டவிரோதமான முறையில் டிப்பர் வாகனத்தினுள் மறைத்து வைக்கப்பட்ட தேக்கை மரக்குற்றிகளை மடக்கி பிடித்தாக இலுப்படிச்சேனை வட்டார வனவள பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.
haran
No comments:
Post a Comment