Sunday, 11 March 2018

186 பேஸ்புக் கணக்குகள் , கைது செய்வதற்கு விசேட நடவடிக்கை

haran
மக்கள் மத்­தியில் பதற்­றத்­தையும் வீண் முறு­கல்­க­ளையும் ஏற்­ப­டுத்தும் வண்ணம் செயற்பட்டவர்களில் 186 பேஸ்புக் கணக்குகள் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.




சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாத மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பியவர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

கண்­டியில் இடம்­பெற்ற வன்­முறை சம்­ப­வங்­கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் வதந்திகளை பரப்பியதாக தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சம்பங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சைபர் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டுள்ள பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்­ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் எதிர்வரும் ஓரிரு தினங்களுக்குள் வழமைக்கு திரும்பும் என தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments: