விசேட செய்திகள்..... அக்கரைப்பற்றில் பதட்ட நிலை தொடர்கின்றது
அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் பெரிய களப்பு பகுதியில் தங்களுக்குச் சொந்தமான காணி என தெரிவித்து வேலியிட சென்ற போது, கடந்த (18) 06 பேர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட்னர் , அவர்களின் மோட்டார் சைக்கிள்களும் நாசப்படுத்தப்பட்டுள்தை தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழ் நிலை தொடர்கின்றது
இதற்கு எதிராக அக்கரைப்பற்று முஸ்லீம் இளையர் மன்றம் எனும் பெயரில் துண்டுப்பிரசுரம் வெளியானது ...
குறித்த காணி விடயம் தொடர்பில் பிரதேச சபை தவிசாளர் க.பேரின்பம் கருத்து தெரிவிக்கையில் இந்த காணியுடன் எமது பிரதேசத்தில் காணப்படுகின்ற சதுப்பு நிலமென்று அழைக்கப்படுகின்ற பகுதிகளை "கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள சட்டம் ( 2009 ஆகஸ்ட் 13 இலக்கம் 1614/19 கீழ் மீனவ முகாமைத்துவ பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது )" சட்டத்தின் பிரகாரம் அடையாளப்படுத்தும் படி எமக்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் அவற்றினை எல்லைப்படுத்தி அடையாளமிட்டு குறித்த அறிவித்தல் பலகை பிரதேச சபையின் அனுசரணையில் இடப்பட்டது
இந்த நிலையில் அந்த அறிவித்தல் பலகையினை சேதப்படுத்தியவர்கள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று சம்பவம் தொடர்பில் தாம் அக்கரைப்பற்று பொலிசாரிடம் சென்றபோது காலதாமதமாகவே சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த நிலைமை தொடர்பில் தாம் தமது தரப்புடன் சட்ட ஆலோசனை மேற்கொண்டுவருவதாகவும் இது தொடர்பில் பிரதேச செயலகடன் இணைந்து ஒரு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க உள்ளதுடன் பொதுமக்கள் தயவு செய்து அமைதியினை கடைப்பிடிக்குமாறும் பிரதேச சபை தவிசாளர் க.பேரின்பம் கைது செய்யப்பட முன்னர் தெரிவித்தார்
இதனை தொடர்ந்து நேற்று வருகை தந்த
அரசாங்க அதிபர்
நிகழ்வில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் தூஷித்த வணிக சிங்க திருக்கோவில் மற்றும் ஆலையடி வேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரிய களப்பு பகுதிகளை நில அளவை செய்து அதனை எல்லையிடும் நடவடிக்கை களை மிக விரைவில் மேற்கொள்ளவுள்ளோம்
இதற்கு கடற்றொழில் நீரியல் வளத் துறை அமைச்சு , விவசாய அமைச்சு, காணி , விவசாய அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அவர்களது ஒத்துளைப்புடன் இவ் அடையாளப் படுத்தலை மேற்கொள்ள திட்டமிடட்டட்டுள்ளது
இதற்கு பாதியளவு நிதி தேவையாகவுள்ளது எனவே முதலில் பெரிய களப்பினை எல்லைப்படுத்தும் வரை அதற்குள் பிரவேசிப்பதும் அதனை சட்டத்திற்கு முரனாக எல்லையிடுவதும் குற்றமாகு ம் என தெரிவித்தார்.
மேலும் இவ் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் , ஆலையடிவேம்பு பிரதேச செலாளர் பொலிசார்
கடற்றொழில் நீரியல் வளத் துறை அமைச்சு , விவசாய அமைச்சு, காணி , விவசாய அமைச்சின் அதிகாரிகள், மீனவ பிரஜைகள், சமுக ஆர் வலர்கள் என பலரும் கலந்து கொண்டிடுந்தமை குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கைது செய்யப்படட
அக்கரைப்பற்றில் தமிழ் மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு மற்றும் அடக்கு முறைகளை எதிர்த்து ஹர்த்தாலும் கண்டன ஆர்ப்பட்டமும் இன்று (21) காலை 8:00 மணிக்கு ஆலையடிவேம்பில் நடத்தப்பட இருப்பது தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் இரவு (20) வெளியிடப்பட்டுள்ளன.
பெரும் திரளான தமிழ்மக்கள் கைது செய்யப்பட்ட பிரதேசபை தவிசாளர் மற்றும் இளைஞர்களை விடுவிக்கச்சொல்லி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பிரதேசசபை தவிசாளரை 14 நாட்கள் விளக்கமறியலில் ...
ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி (புதன்கிழமை) உத்தரவிட்டார்.
அம்பாறை, ஆலையடிவேம்பு சின்னமுகத்துவாரம் களப்புப் பகுதி நில ஆக்கிரமிப்பாளர்களை தடுத்து நிறுத்தச் சென்றபோது எற்பட்ட சர்ச்சை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசசபையின் தவிசாளர் பேரின்பராஜா உள்ளிட்டவர்களுக்கே இவ்வாறு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து இன்று ஆலையடிவேம்பு பிரதேச பொதுமக்கள் எனும் பெயரில்
ஹர்த்தாலுக்கு அழைப்பு
தொடர்ந்து அக்கரைப்பற்றில் தற்ப்போது வீதிகள் மூடப்பட்டு கடைகளும் மூடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment