2019 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரை சுகாதார அமைச்சு உலக வங்கி இணைந்து அமுல்படுத்திய ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் செயற்றிட்டத்தின் (PSSP) கீழ் சிறந்த வெளிப்பாடுகளை வெளிப்படுத்தியமைக்காக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பனங்காடு பிரதேச வைத்தியசாலை 5ஆவது இடத்தினை தேசிய ரீதியில் பெற்றுக்கொண்டது.
இவ்விருது அன்மையில் கொழும்பில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது.
விருது வழங்கும் நிகழ்வில், வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் சக்கீல் சார்பாக வைத்தியர் குணாளின் சிவராஜ் உள்ளிட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பெற்றுக்கொண்டனர்.
இலங்கையின் சகல பாகங்களிலும் உள்ள பெரும்பாலான வைத்திய சாலைகள் இத்திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு பல அபிவிருத்தி அடைந்து வருகின்றன.
குறித்த செயற்றிட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் முன்னாள் பணிப்பாளர் ஏ. எல் அலாவுதீன் அவர்களின் காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டு பின்னர் குறித்த செயற்றிட்டம் வைத்தியர். ஜீ சுகுணன் மற்றும் வைத்தியர் ஐ.எல்.எம் ரிபாஸ் ஆகியோரின் தலைமையிலும் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு, சமகாலத்தில் அதன் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீன் தலைமையிலும் வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டது
இச்செயற்பாட்டின் ஊடாக பிரதேசத்திலுள்ள 35 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தனிப்பட்ட சுகாதார அறிக்கை புத்தகம் தயாரிக்கப்பட்டது. இதற்காக உபவாச இரத்த பரிசோதனை மற்றும் கொலஸ்ரோல் நிறை உயரம் உடற்திணிவு சுட்டி என பல அடிப்படை சோதனைகள் செய்யப்பட்டு நோய் அறிகுறிகளை அல்லது நோய்க்கான தாக்கம் உள்ளவர்களை அடையாளம் கண்டு சிகிச்சை மற்றும் அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கப்பட்டது.
இதற்கமைவாக இலங்கையில் உள்ள ஒவ்வொரு வைத்தியசாலைக்கும் இலக்கு மக்கள் கணக்கு தொகை கணக்கிடப்பட்டு பிரதேச மொத்த சனத்தொகையின் அடிப்படையில் குறித்த ஒருவருடத்திற்குரிய இலக்கு மக்கள் கணக்கு தொகை கணக்கிடப்பட்டது.
அந்த இலக்கினை தரப்பட்ட நேரத்திலும் குறுகிய காலத்தில் செய்து முடித்த வைத்தியசாலைகளை தரப்படுத்தியதில் ஆரம்ப சுகாதார பிரிவு வைத்திய சாலைகளுக்குள் நாடளாவிய ரீதியில் பனங்காடு பிரதேச வைத்தியசாலை 5 ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
இச்செயற்பாடுகள் யாவும் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் வைத்தியர் யு.எல்எம்.சகீல் தலமையில் வைத்தியர் குணாளினி சிவராஜ் மற்றும் தாதிய உத்தியோகத்தர் மாணிக்கவாசகம் தயாகரன் முழுப்பொறுப்பில் தாதிய உத்தியோகத்தர்கள் குடும்பநல உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகாதார உதவியாளர்களின் உதவியுடன் திறன் பட முடிக்கப்பட்டது...
இந்த திட்டத்தினூடாகவே சரியான முறையில் இலக்கை அடைந்தமையின் பயனாக குறித்த வைத்தியசாலைக்கு புதிய மாடிக்கட்டடம், பெறுமதியான மருத்துவ ஆய்வுக்கூட இயந்திரம் பற்சிகிச்சை இயந்திரம் என்பன கிடைக்கப்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இப்பாராட்டு கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் பணிமனை உயர் அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர்கள் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் எல்லோரையும் சார்ந்தது.
இதேநேரம் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான பொதுமக்கள் மற்றும் தனியாரின் நன்கொடை மற்றும் பங்களிப்பும் இவ்வைத்தியசாலைக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment