(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயப் பாடசாலைகளுக்கான சாரணர் பாசறை அண்மையில் திக்கோடைக் கிராமத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வானது மிகவும் சிறப்பானமுறையில் ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த வகையில் இச் சாரணர் பாசறைக்கு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன், மற்றும் பட்டிருப்பு வலயத்தின் நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.வி.மயில்வாகனம் விஜயம் மேற் கொண்டு பாசறையில் கலந்து கொண்டனர்.
அத்துடன் அங்கு பாசறையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆணையாளர்கள், சாரண தலைவர்கள் மற்றும் சாரண மாணவர்களுடன் இணைந்து பல்வேறு செய்றபாடுகளிலும் கலந்து கொண்டு தங்களது மகிழச்சியினைப் பகிர்ந்து கொண்டனர்.
No comments:
Post a Comment