Friday, 1 June 2018

அறநெறிக் கொடி தினம்


இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக தேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு மாதமும் இந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினமும் அனுஷ்டிக்கப்படுகின்றன.


இவை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரது குருபூஜை தினமாகிய மே மாதம் 31 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படுவதாக இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.

இந்தக் காலப்பகுதியில் அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு செயற்றிட்டங்கள் அமுலாக்கப்படும். புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரது வழிகாட்டலுக்கு அமைய இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இதற்கபன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


No comments: