Sunday, 10 June 2018

படுகொலை செய்யப்பட்ட 600 பொலிஸாரின் நினைவேந்தல் இன்று 11


அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில், 1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 600 பொலிஸாரின் நினைவேந்தல் நிகழ்வுகள், இன்று (11) காலை 09 மணிக்கு, திருக்கோவில் ரூபஸ் குளத்துக்கு அருகாமையில், ஆத்மசாந்தி வேண்டி, விசேட வழிபாட்டு நிகழ்வுகளுடன் இடம்பெறவுள்ளனவென பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கு, படுகொலை செய்யப்பட்ட சிங்கள, முஸ்லிம், தமிழ் பொலிஸாரின் நினைவாக, விசேட நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு, தீபச் சுடர்கள் ஏற்றி வைக்கப்படவுள்ளதுடன், படுகொலை செய்யப்பட்ட பொலிஸாருக்கான அணிவகுப்பு அஞ்சலியும் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றவுள்ளதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இப்படுகொலை, 1990ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. மாவனல்லை, அம்பாறை பிரதேசங்களைச் சேர்ந்த இரண்டு பொலிஸார், இதன்போது உயிர்தப்பியிருந்தனர்.
இதேவேளை, நேற்று  (09) பௌத்த துறவிகளுடன் ரூபஸ் குளத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, சம்பவ இடத்தில் கற்தூண் ஒன்றை நாட்டியமை குறிப்பிடத்தக்கதுharan

No comments: