(க-சரவணன்)
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள அல்விஸ் குளப்பகுதியில் புதையல்தோண்டிய மின்சாரசபை ஊழியர் ஒருவர் உட்பட 4 பேரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.என்.றிஸ்வி நேற்று திங்கட்கிழமை (05) உத்தரவிட்டார் .
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு புதையல் தோண்டுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த மின்மானி வாசிப்பவர் ஒருவர் உட்பட நுவரெலியா புசலாவையைச் சேர்ந்த 4 பேரை கைது செய்ததுடன் புதையல்தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் பூஜைக்கான பொருட்களை கைப்பற்றினர்
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நேற்று திங்கட்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எஸ்.என்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவர்களை 14 நாட்டகள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
haran
No comments:
Post a Comment