Sunday, 10 June 2018

மீனவர்கள் அனுமதியினை பெற்றுக்கொள்ளவும்


ஆழ்கடல் மீனவர்கள் அனுமதியினை பெற்றுக்கொள்ளவும் அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில், ஆழ்கடலுக்கு மீன்பிடிப்பதற்காகச் செல்லும் மீனவர்கள், தங்களது மீன்பிடிப் படகுகளை பதிவு செய்துகொள்ளாவிடின், விரைவில் பதிவு செய்து, மீன்பிடிப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு,
அட்டாளைச்சேனை பிரதேச மீன்பிடிப் பரிசோதகர் எஸ்.பாவு, நேற்று (10) தெரிவித்தார். ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களிலிருந்து, ஆழ்கடலுக்கு மீன்பிடிப்பதற்காகச் செல்லும் மீனவர்கள், தத்தமது மீன்பிடிப் படகு, வள்ளம், தோணி, இயந்திரம் போன்றவற்றுக்கு அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர் கூறினார். பதிவுசெய்து கொள்வதற்கான விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொண்டு, மீன்பிடிப் படகு தொடர்புடைய விவரம், மீன்பிடித் தொழிலுக்காகச் செல்வோரின் விவரம் போன்றவற்றைச் சமர்ப்பிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை, இந்த அனுமதிப்பத்திரம் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட படகுகள், வள்ளங்கள், தோணிகள் என்பன, ஒலுவில் துறைமுகக் கடல் பிரதேசத்தில் வைத்து, கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார். இதனால், மீனவர்கள் எதிர்நோக்கும் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கும் பொருட்டே இந்தப் பணிப்புரை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அரசாங்கத்தால் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் மானியத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, இந்த அனுமதிப்பத்திரம் அவசியமானது என்பதால், இதை விரைவில் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.

No comments: