Saturday, 16 June 2018

ஜெயந்தன் படை போராளியான திலீபன் ...

-செங்கலடி சுபா-
மட்டக்களப்பு கரவெட்டியாறு கிராமத்தில் ஜெயந்தன் படை போராளியான திலீபன் என்கிற வடிவேல் தில்லையம்பலம்  48 வயது   என்பவரே இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக உள்ளார்.  இவரை ஒரு வயோதிப தாயாரே கவனித்து வருகின்றார். இவருடைய தகப்பனாரான வடிவேல்  என்பவரும் நடக்க முடியாது உள்ளார்.


இவரை வைத்திய சாலைக்கு கொண்டு பராமரிக்க ஒருவரும் இல்லாத நிலையில் இவர் தொடர்ந்தும் படுத்த படுக்கையாக உள்ளார்.
இவருக்கு சக்கர நாற்காலி மற்றும் மலசலகூட வசதிகள் எதுவும் இன்றி கஷ்டப்பட்டு வருகின்றார்.

இவரது மூத்த மகனை இறுதி யுத்தத்தில் இழந்து தவிக்கும் இவர் தனது குடும்பத்தையும் பிரிந்து வாழ்கிறார்.

இவரது குடும்பத்தில் இரண்டு மாவீரர்கள் களப்பலி ஆகியுள்ளனர்.. இவரது அக்காவான விஜித்தா என்பவரின் பெயரிலேயே கரவெட்டியாறு விஜித்தா தமிழ் கலவன் பாடசாலை இயங்கி வந்துள்ளது.  குறித்த பாடசாலையும் ஆசிரியர் பற்றாக்குறையால் தற்போது இயங்காது உள்ளது.

மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் வைத்திய உதவிகள் இன்றி படுத்த படுக்கையாக இருக்கும் திலீபனை காப்பாற்றி அவருக்கு மறுவாழ்வளிக்க முன்வருமாறு புலம்பெயர் அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கின்றார் அவரது தாய்



கவனிப்பார் இன்றி படுத்த படுக்கையாக கிடக்கும் முன்னாள் போராளி! Rating: 4.5 Diposkan Oleh: K. SUBAJAN
haran

No comments: