செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலம், ஆயித்தியமலை கிராமத்தைச் சேர்ந்த நடராசா ஸ்ரீசங்கர் (வயது 20) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் கடந்த மூன்று வருட காலமாக உளநலப் பாதிப்பிற்குள்ளாகிய நிலையில் இரு வாரங்களுக்கு ஒருமுறை சிகிச்சை பெற்று வந்தவரென உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தவரின் சடலம், உடற்கூறாய்வுக்காக கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
haran
No comments:
Post a Comment