Monday, 11 June 2018

ஒருவர் கைது


மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் இன்று (திங்கட்கிழமை) கைது செய்துள்ளனர்.


இந்தச் சம்பவத்தில் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்நத 40 வயது மதிக்கத்தக்கவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேகநபர், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய உழவு இயந்திரத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு மண்ணை கடத்த சந்தேகநபர் முற்பட்டமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மணல் கடத்தலில் ஈடுபட்ட புதுக்குடியிருப்பைச் சேர்ந்த நபர் கைது! Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka
haran

No comments: