கடந்த 2009 ஆம் ஆண்டில் கொக்கட்டிச்சோலை பகுதியில் 8 மாத கர்ப்பிணியான தனது மனைவியை கொலை செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையானது இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றவாளியாக இனம் காணப்பட்ட குறித்த நபருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி எம்.வை.எம். இஸர்டீன் தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
குறித்த நபர் தான் செய்த கொலையை மறைப்பதற்காக கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த நபரே குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
கடந்த இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு இவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
haran
No comments:
Post a Comment