அக்கரைப்பற்று மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் இவ்வருடத்திற்கான ஆலையடிவேம்பு பிரதேச பாலர் பாடசாலை மழலைகளின் வருடாந்த கலைவிழா 23.12.2013, திங்கட்கிழமை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன் சிறார்களுக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கிவைத்தார். மேலும் அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை கல்விப்பணியகத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.இப்றாஹிம் சிறப்பு அதிதியாகவும் அப்பணியகத்தின் முகாமைத்துவ உதவியாளர் பி.மோகனதாஸ் விசேட அதிதியாகவும் இவ்விழாவில் பங்குபற்றினர்.
இதில் அக்கரைப்பற்று – 8 விவேகானந்தா பாலர் பாடசாலை, அக்கரைப்பற்று – 7 கனகதுர்க்கா பாலர் பாடசாலை, கோளாவில் – 3 அம்பாள் பாலர் பாடசாலை, கோளாவில் – 1 விநாயகர் பாலர் பாடசாலை, பெரியபனங்காடு மறுமலர்ச்சி பாலர் பாடசாலை, ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலை ஆகியவற்றிலிருந்து மாணவர்கள் கலந்துகொண்டு பேச்சு, நடனம், நாடகம் உட்பட பல்வேறுபட்ட கலைநிகழ்வுகளை நடாத்தினர். இறுதியாக அவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment