சீகிரியாவை பார்வையிடுவதற்காக வந்த சீன நாட்டு யுவதியொருவருக்கு சொந்தமான ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயத்தாள்களை திருடிய மேலும் ஒரு சீன நாட்டு யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள சீன நாட்டை சேர்ந்த குழுவொன்று, நேற்று சீகிரியாவை பார்வையிட வந்துள்ள நிலையில், அதில் 25 வயதான இரண்டு யுவதிகள் சுற்றுலா விடுதியொன்றில் ஒரே அறையில் தங்கியுள்ளனர்.
இதன்போது யுவதியொருவர், தனக்கு சொந்தமான ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயுள்ளதாக விடுதியின் முகாமையாளருக்கு அறிவித்துள்ளார்.
பின்னர் இது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், மற்றைய யுவதி சம்பவம் தொடர்பில் சீகிரிய காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment