Saturday, 16 June 2018

வெட்டிக் கொலை

news by....battinews.com....thank you..

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி, மாவலிங்கன்துறை கிராமத்தில் வீட்டுத்திட்ட குடியிருப்பில் ( ஈரான் சிட்டி ) இன்று சனிக்கிழமை  மாலை 4.00 மணி வேளையில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.


ஆறு பிள்ளைகளின் (3 ஆண், 3 பெண்) தந்தையான கூலித்தொழிலாளி மா. லெட்சுமணன் (வயது 43) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது , பக்கத்து வீட்டுக் கார் பழைய பகை காரணமாக வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டு மரம் சீவும் கருவியால் (வாச்சு) தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டத்தில் கொலை சம்பவித்துள்ளது என குறிப்பிடப்படுகின்றது.

சந்தேக நபர் தப்பிசென்றுள்ள வேளையில் தேடும் பணியில் காத்தான்குடி பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

மனைவி மற்றும் ஆறு பிள்ளைகளை அனாதரவாக்கிய இக் கொலை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதுடன். ஒரு குடும்பமானது  குடும்பத் தலைவரை இழந்த நிலையில் பெரும் பரிதாபத்துடன் அனாதரவாக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணையை காத்தான்குடி போலீசார் மேற்கொண்டுள்ளனர்.









ஆரையம்பதியில் 6 பிள்ளைகளின் தந்தை வெட்டிக் கொலை !! Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka

No comments: