தாய்ப் பால் புரைக்கேறியதில் சுமார் ஒன்றரை மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை (7) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சித்தாண்டி கிராமத்தைச் சேர்ந்த டனூஜன் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளார்.
தாய்ப்பால் ஊட்டும்போது குழந்தை மயக்கமுற்றுள்ளது. இதனால் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சேர்த்தபோது குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை பிறப்பு ரீதியாகவே 11 வகையான உடற் குறைபாடுகளுடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
குழந்தையின் சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
haran
No comments:
Post a Comment