விளையாட்டுத்துறை,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 44ஆவது தேசிய விளையாட்டு விழா கொழும்பில் இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சி, கடந்த 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெற்றது.
இவ்விளையாட்டு நிகழ்வில் கிழக்கு மாகாணம் சார்பில் திருகோணமலையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பீச் ஔிபோல் (கடற்கரை கைப்பந்தாட்டம்) விளையாட்டு போட்டியில் பங்கு பற்றி தங்கப்பதக்கத்தினை சுவீகரித்துக்கொண்டனர்.
திருகோணமலையைச் சேர்ந்த ஈ.டி.வாசனா மதுமாலி மற்றும் ஏ.ஹசுனி தாறுக லக்ஷானி ஆகியோரே தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
haran
No comments:
Post a Comment