haranஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய எண்ணைக்காப்பு (16)
THANK U RASAS STUDIO
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், பரிவார மூர்த்திகள், இராஜகோபுரம் என்பன புனருத்தாபனம்
செய்யப்பட்டு 1 5ம் திகதி மாலை விநாயகர் வழிபாடும், கிராமசாந்தி, வாஸ்துசாந்தி கிரியைகள் நடைபெற்று 16ம் திகதி அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாற்றுதலும், 17ம்திகதி மகா உத்தமயாக நவகுண்டபஷ் அஷ்டபந்தன ஜீர்ணோத்தாரண புனராவர்த்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகமானது (17) ஞாயிற்றுக்கிழமை பூச நட்சத்திரமும், சித்த யோகமும் வணிக கரணமும், சிங்க லக்கினமும் கூடிய காலை 08.53 - 10.23 வரையுள்ள சுபாசுப மூகூர்த்தத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கும்,
ஸ்ரீ சித்தி விநாயகருக்கும் வரும் 17ஆம் திகதி மகா கும்பாபிஷேகம்
இலங்கைத் திருநாட்டின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று நகருக்கு தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ள செந்நெல்லும், பயிர் வளங்களும், முக்கனிகளும் செழித்தோங்கும் கோளாவில் 03 கிராமத்தில் அருள் வளமும், பக்திப் பெருவளமும் கொண்டு செந்தமிழ் ஆட்சியும் நிறைந்திருக்கும் பழம்பெரும் ஸ்ரீ முத்துமாரி அம்பிகையும், ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானும், பன்நெடுங்காலமாக அருளாட்சி செய்து வருகின்றனர். இத்தலத்தின் விருட்சமான வம்மி மரம், மற்றும் தென்னை மரங்களும், வெண் மணலும், வங்கக்கடலில் இருந்து வீசும் மெல்லிய காற்றும், குயில்கள் பாடும் ஓசையும், ஆலயத்திற்கு வரும் அடியார்களின் மனங்களை தொட்டுச்செல்லும்.
இவ்வாலயம் கடந்த 2014ம் வருடம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், பரிவார மூர்த்திகள், இராஜகோபுரம் என்பன புனருத்தாபனம் செய்யப்பட்டு உத்தமயாக நவகுண்டபஷ் அஷ்டபந்தன ஜீர்ணோத்தாரண புனராவர்த்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகமானது நிகழும் சர்வமங்களம் மிகு விளம்பி வருடம் ஆனித்திங்கள் 03ம் நாள் (17.06.2018) ஞாயிற்றுக்கிழமை பூச நட்சத்திரமும், சித்த யோகமும் வணிக கரணமும், சிங்க லக்கினமும் கூடிய காலை 08.53 - 10.23 வரையுள்ள சுபாசுப மூகூர்த்தத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூடியுள்ளது.
மகா கும்பாபிஷேக கிரியைகள் யாவும்;, தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தான பிரதிஷ்டா பிரதம சிவாச்சார்யார் பிரம்மஸ்ரீ சுந்தர செந்தில்ராஜ சிவாச்சார்யார் தலைமையிலும், கோளாவில் 03 ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குருவான ஜோதிட ஜோதி கணேசன் குருக்கள், கோளாவில் 03 ஸ்ரீ சித்தி விநாயகர் பிரமத குரு சிவஸ்ரீ தவேந்திரசர்மா மற்றும் இலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களைச்சேர்ந்த பதினைந்துக்கும் அதிகமான பஞ்சகுண்ட நவகுண்ட சோபித சிவாச்சாரியார்களும் மற்றும் பத்து யாகசம்கர்சகர்களும் கலந்துகொண்டு மகா கும்பாபிஷேக கிரியைகளை செவ்வனே நிறைவேற்றுவர். மகா கும்பாபிஷேக காலங்களில் 15ம் திகதி மாலை விநாயகர் வழிபாடும், கிராமசாந்தி, வாஸ்;துசாந்தி கிரியைகள் நடைபெற்று 16ம் திகதி அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாற்றுதலும்;, 17ம்திகதி மகா கும்பாபிஷேகமும், அன்னதானமும் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.
அதனைத்தொடர்ந்து எதிர்வரும் 26ம் திகதி வரை மண்டலாபிஷேக பூசைகள் நடைபெற்று 27ம் திகதி புதன் கிழமை வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை 02ம் திகதி தீர்த்த உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற ஏற்பாடாகவுள்ளது. திருவிழாக்காலங்களில் 30ம் திகதி சனிக்கிழமை அன்னாதானம் நிகழ்வும், வரும் 01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை அம்பாள், விநாயகப்பெருமான் முத்துசப்புர வீதி;, உலா நிகழ்வும் இடம்பெறும்.
மாரியம்மன் ஆலய வரலாறு.......
இற்றைக்கு சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் இக்கிராமத்தில் வாழ்ந்த மக்கள் விவசாயம், சேனைப்பயிர், கால்நடை வளர்ப்பு, ஆகிய பாரம்பரிய தொழில்களைச்செய்து வந்தனர். அப்போது மாரிமழை பெய்யவில்லை வரட்சி ஏற்பட்டது. விவசாயம், சேனைப்பயிர், செய்கை பாதிக்கப்பட்டது. மக்கள் பட்டினியால் வாடினர். அம்மன் நோய், கண்நோய் ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மடிந்தனர். இது மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது அப்போது ஊர்ப்பெரியார் ஒருவரின் கனவில் அம்பாள் தோன்றி மாரியம்மனுக்கு பூசை வழிபாடு செய்து வர ஊருக்கு நன்மை உண்டாகும் எனச் சொல்லியதை அடுத்து அப்பெரியார் மக்களை ஒன்று கூட்டி, தான் கனவில் கண்டதை சொன்னார். அதன்படி மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அம்பாளுக்கு கும்பம் வைத்து சடங்கு செய்வதென தீர்மானித்து பந்தல் நட்டு வேப்பிலைகள் கட்டி அலங்காரம் செய்து அம்பாளை பயபக்தியுடன் கும்பத்தில் ஆபாரணம் செய்து வழிபாடு செய்தனர். அவ்வேளை மழை பெய்தது, நோய்கள் அற்றுப்போனது கிராமம் செழிப்படைந்தது. அதன் பின்னர் இச்சடங்கானது ஒவ்வொரு வருடத்திலும் ஆனி மாதத்தில் மிகச்சிறப்பாக செய்யப்படுவது வழக்கமாகும். இக்கிராமம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணத்தொடங்கியதும் 1978ம் ஆண்டு அம்மனுக்கு புதிய ஆலயம் அமைக்கப்பட்டு ஓர் கும்பாபிஷேக நிகழ்வும், 2003ம் ஆண்டில் 41 அடி உயரமான இராஜகோபுரம் அமைக்கப்பட்டு 02வது கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வரலாறு
தென்னிந்தியாவைச்சேர்ந்த மூன்று சித்தர்கள் 1901ம் ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கைக்கு கடல் மார்க்கமாக வருகை தந்திருந்தனர். அதில் சித்தர் சி;த்தானைக்குட்டி சுவாமிகளும் ஒருவர். சுவாமிகள் 1910ம் ஆண்டு காலப்பகுதிகளில் காரைதீவு, அக்கரைப்பற்று, கோளாவில், பனங்காடு கிராம மக்களோடு வாழ்ந்து தீராத நோய்களைத்தீர்த்து பல அற்புதங்களை செய்து வந்துள்ளார். அன்று ஓர் நாள் சுவாமி கோளாவில் 03 கிராமத்திலுள்ள சிறிய வம்மி மரம் ஒன்றின் கீழ் உறங்கிக்கொண்டிருந்தார். அவ்வேளை சுவாமியின் சீடர்கள் சுவாமியை எழுப்பி கதிர்காம யாத்திரை செல்வோமா என்று கேட்டனர். அதற்கு சுவாமிகள் கதிர்காமத்தைத்தானே பார்க்கப்போகிறீர்கள் எனது உள்ளங்;கையை உற்றுப்பாருங்கள் என்று சொன்னார்.
சீடர்களும் சுவாமினுடைய கையை பார்த்தபோது கதிர்காம கந்தன் ஆலயத்தினையும், காவடி ஆட்டங்களையும் கண்டுகளித்தனர். சீடர்களுக்கு இக்காட்சி வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. இதனால் மக்களுக்கு சுவாமி மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டது. இக்கிராமத்திலுள்ள மக்கள் சுவாமியிடம் விநாயகர் கோயில் ஒன்றை அமைப்பதற்கு இடம் ஒன்றை தெரிவு செய்யுமாறு கேட்டனர். அதனை ஏற்ற சுவாமி ஆலயத்திற்கான இடத்தை தனது கால் விரல் நுனியால் கீறி நிலையம் எடுத்துக்கொடுத்தார். அப்போது இவ்விடம் வரை கடலலை வரும் என கூறி இருந்தார்.
சுவாமியினால் நிலையம் குறிக்கப்பட்ட இடத்தில் 1929ம் ஆண்டில் பண்டைய கட்டட வடிவமைப்பான சுண்ணாம்பும், தேனும், செங்கற்கள்; கொண்டு சிறிய ஆலயம் அமைக்கப்பட்டு விநாயகர் வழிபாடு ஆரம்பமானது. சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகள் அன்று கடல் பேரலை வரும் என்று கூறிய வாக்கு கடந்த 2004 கிழக்கு கடற்கரை பிரதேங்களை தாக்கிய பேரலை ஆலய வெளி வீதியை அடைந்தது பேரரதிசயமே.
இவ்வாலயம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கைத் தாக்கங்களுக்கு உள்ளாகி சேதமடைந்து வெள்ள நீர் ஆலய மண்டபத்தில் உட்புகுவதன் நிமிர்த்தம் புதிய விநாயகர் ஆலயம் ஒன்றை அமைப்பதற்கு ஆலய நிருவாகமும், இவ்வூர் மக்களும் ஒன்று சேர்ந்து முடிவெடுத்தனர். அதன்படி உள்ளுர் ஆலய கட்டட வடிவமைப்பாளர்கள், தென்னிந்திய சிற்பக்கலைஞர்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு மாமல்லபுரத்தைச்சேர்ந்த ஆலய நிர்மாண ஸ்தபதி வி.சுகுமார் (னு.யு.ளு) அவர்களின் கலைநுட்ப ஆற்றலுடன் புதிதாக ஸ்ரீ சித்தி விநாயகருக்கு பிரதான ஆலயமும், பரிவார மூர்த்திகளான சிவன், உமையம்மை, முருகன், நாகதம்பிரான், வைரவர், நவக்கிரக மூர்த்திகள், சண்டேஸ்வரர், இதனுடன் சித்தானைக்குட்டி சித்தருக்கும் உள்ளக மண்டபப் பரிபாகத்தில் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாலய கட்டட நிர்மாணப்பணிகளுக்கு இவ்வூர்மக்களோடு, சகல மக்களினதும், நிதி நன்கொடை மூலம் அழகுற காட்சியளிக்கும் இவ்வாலய மகா கும்பாபிஷேகத்தை காணுவது இப்பகுதி வாழ் மக்களுக்கு கிடைத்த பேறு என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்தான் இலட்சுமணன் ஜே.பி
கோளாவில் 03
அக்கரைப்பற்று.

மகா கும்பாபிஷேக கிரியைகள் யாவும் தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தான பிரதிஷ்டா பிரதம சிவாச்சார்யார் பிரம்மஸ்ரீ சுந்தர செந்தில்ராஜ சிவாச்சார்யார் தலைமையிலும், கோளாவில் 03 ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குருவான ஜோதிட ஜோதி கணேசன் குருக்கள், கோளாவில் 03 ஸ்ரீ சித்தி விநாயகர் பிரமத குரு சிவஸ்ரீ தவேந்திரசர்மா மற்றும் இலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களைச்சேர்ந்த பதினைந்துக்கும் அதிகமான பஞ்சகுண்ட நவகுண்ட சோபித சிவாச்சாரியார்களும் மற்றும் பத்து யாகசம்கர்சகர்களும் கலந்துகொண்டு மகா கும்பாபிஷேக கிரியைகளை செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய
ஆலய வரலாறு .........................................................
ஸ்ரீ சித்தி விநாயகருக்கும் வரும் 17ஆம் திகதி மகா கும்பாபிஷேகம்
இலங்கைத் திருநாட்டின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று நகருக்கு தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ள செந்நெல்லும், பயிர் வளங்களும், முக்கனிகளும் செழித்தோங்கும் கோளாவில் 03 கிராமத்தில் அருள் வளமும், பக்திப் பெருவளமும் கொண்டு செந்தமிழ் ஆட்சியும் நிறைந்திருக்கும் பழம்பெரும் ஸ்ரீ முத்துமாரி அம்பிகையும், ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானும், பன்நெடுங்காலமாக அருளாட்சி செய்து வருகின்றனர். இத்தலத்தின் விருட்சமான வம்மி மரம், மற்றும் தென்னை மரங்களும், வெண் மணலும், வங்கக்கடலில் இருந்து வீசும் மெல்லிய காற்றும், குயில்கள் பாடும் ஓசையும், ஆலயத்திற்கு வரும் அடியார்களின் மனங்களை தொட்டுச்செல்லும்.
இவ்வாலயம் கடந்த 2014ம் வருடம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், பரிவார மூர்த்திகள், இராஜகோபுரம் என்பன புனருத்தாபனம் செய்யப்பட்டு உத்தமயாக நவகுண்டபஷ் அஷ்டபந்தன ஜீர்ணோத்தாரண புனராவர்த்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகமானது நிகழும் சர்வமங்களம் மிகு விளம்பி வருடம் ஆனித்திங்கள் 03ம் நாள் (17.06.2018) ஞாயிற்றுக்கிழமை பூச நட்சத்திரமும், சித்த யோகமும் வணிக கரணமும், சிங்க லக்கினமும் கூடிய காலை 08.53 - 10.23 வரையுள்ள சுபாசுப மூகூர்த்தத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூடியுள்ளது.
மகா கும்பாபிஷேக கிரியைகள் யாவும்;, தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தான பிரதிஷ்டா பிரதம சிவாச்சார்யார் பிரம்மஸ்ரீ சுந்தர செந்தில்ராஜ சிவாச்சார்யார் தலைமையிலும், கோளாவில் 03 ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குருவான ஜோதிட ஜோதி கணேசன் குருக்கள், கோளாவில் 03 ஸ்ரீ சித்தி விநாயகர் பிரமத குரு சிவஸ்ரீ தவேந்திரசர்மா மற்றும் இலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களைச்சேர்ந்த பதினைந்துக்கும் அதிகமான பஞ்சகுண்ட நவகுண்ட சோபித சிவாச்சாரியார்களும் மற்றும் பத்து யாகசம்கர்சகர்களும் கலந்துகொண்டு மகா கும்பாபிஷேக கிரியைகளை செவ்வனே நிறைவேற்றுவர். மகா கும்பாபிஷேக காலங்களில் 15ம் திகதி மாலை விநாயகர் வழிபாடும், கிராமசாந்தி, வாஸ்;துசாந்தி கிரியைகள் நடைபெற்று 16ம் திகதி அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாற்றுதலும்;, 17ம்திகதி மகா கும்பாபிஷேகமும், அன்னதானமும் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.
அதனைத்தொடர்ந்து எதிர்வரும் 26ம் திகதி வரை மண்டலாபிஷேக பூசைகள் நடைபெற்று 27ம் திகதி புதன் கிழமை வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை 02ம் திகதி தீர்த்த உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற ஏற்பாடாகவுள்ளது. திருவிழாக்காலங்களில் 30ம் திகதி சனிக்கிழமை அன்னாதானம் நிகழ்வும், வரும் 01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை அம்பாள், விநாயகப்பெருமான் முத்துசப்புர வீதி;, உலா நிகழ்வும் இடம்பெறும்.
மாரியம்மன் ஆலய வரலாறு.......
இற்றைக்கு சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் இக்கிராமத்தில் வாழ்ந்த மக்கள் விவசாயம், சேனைப்பயிர், கால்நடை வளர்ப்பு, ஆகிய பாரம்பரிய தொழில்களைச்செய்து வந்தனர். அப்போது மாரிமழை பெய்யவில்லை வரட்சி ஏற்பட்டது. விவசாயம், சேனைப்பயிர், செய்கை பாதிக்கப்பட்டது. மக்கள் பட்டினியால் வாடினர். அம்மன் நோய், கண்நோய் ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மடிந்தனர். இது மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது அப்போது ஊர்ப்பெரியார் ஒருவரின் கனவில் அம்பாள் தோன்றி மாரியம்மனுக்கு பூசை வழிபாடு செய்து வர ஊருக்கு நன்மை உண்டாகும் எனச் சொல்லியதை அடுத்து அப்பெரியார் மக்களை ஒன்று கூட்டி, தான் கனவில் கண்டதை சொன்னார். அதன்படி மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அம்பாளுக்கு கும்பம் வைத்து சடங்கு செய்வதென தீர்மானித்து பந்தல் நட்டு வேப்பிலைகள் கட்டி அலங்காரம் செய்து அம்பாளை பயபக்தியுடன் கும்பத்தில் ஆபாரணம் செய்து வழிபாடு செய்தனர். அவ்வேளை மழை பெய்தது, நோய்கள் அற்றுப்போனது கிராமம் செழிப்படைந்தது. அதன் பின்னர் இச்சடங்கானது ஒவ்வொரு வருடத்திலும் ஆனி மாதத்தில் மிகச்சிறப்பாக செய்யப்படுவது வழக்கமாகும். இக்கிராமம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணத்தொடங்கியதும் 1978ம் ஆண்டு அம்மனுக்கு புதிய ஆலயம் அமைக்கப்பட்டு ஓர் கும்பாபிஷேக நிகழ்வும், 2003ம் ஆண்டில் 41 அடி உயரமான இராஜகோபுரம் அமைக்கப்பட்டு 02வது கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வரலாறு
தென்னிந்தியாவைச்சேர்ந்த மூன்று சித்தர்கள் 1901ம் ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கைக்கு கடல் மார்க்கமாக வருகை தந்திருந்தனர். அதில் சித்தர் சி;த்தானைக்குட்டி சுவாமிகளும் ஒருவர். சுவாமிகள் 1910ம் ஆண்டு காலப்பகுதிகளில் காரைதீவு, அக்கரைப்பற்று, கோளாவில், பனங்காடு கிராம மக்களோடு வாழ்ந்து தீராத நோய்களைத்தீர்த்து பல அற்புதங்களை செய்து வந்துள்ளார். அன்று ஓர் நாள் சுவாமி கோளாவில் 03 கிராமத்திலுள்ள சிறிய வம்மி மரம் ஒன்றின் கீழ் உறங்கிக்கொண்டிருந்தார். அவ்வேளை சுவாமியின் சீடர்கள் சுவாமியை எழுப்பி கதிர்காம யாத்திரை செல்வோமா என்று கேட்டனர். அதற்கு சுவாமிகள் கதிர்காமத்தைத்தானே பார்க்கப்போகிறீர்கள் எனது உள்ளங்;கையை உற்றுப்பாருங்கள் என்று சொன்னார்.
சீடர்களும் சுவாமினுடைய கையை பார்த்தபோது கதிர்காம கந்தன் ஆலயத்தினையும், காவடி ஆட்டங்களையும் கண்டுகளித்தனர். சீடர்களுக்கு இக்காட்சி வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. இதனால் மக்களுக்கு சுவாமி மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டது. இக்கிராமத்திலுள்ள மக்கள் சுவாமியிடம் விநாயகர் கோயில் ஒன்றை அமைப்பதற்கு இடம் ஒன்றை தெரிவு செய்யுமாறு கேட்டனர். அதனை ஏற்ற சுவாமி ஆலயத்திற்கான இடத்தை தனது கால் விரல் நுனியால் கீறி நிலையம் எடுத்துக்கொடுத்தார். அப்போது இவ்விடம் வரை கடலலை வரும் என கூறி இருந்தார்.
சுவாமியினால் நிலையம் குறிக்கப்பட்ட இடத்தில் 1929ம் ஆண்டில் பண்டைய கட்டட வடிவமைப்பான சுண்ணாம்பும், தேனும், செங்கற்கள்; கொண்டு சிறிய ஆலயம் அமைக்கப்பட்டு விநாயகர் வழிபாடு ஆரம்பமானது. சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகள் அன்று கடல் பேரலை வரும் என்று கூறிய வாக்கு கடந்த 2004 கிழக்கு கடற்கரை பிரதேங்களை தாக்கிய பேரலை ஆலய வெளி வீதியை அடைந்தது பேரரதிசயமே.
இவ்வாலயம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கைத் தாக்கங்களுக்கு உள்ளாகி சேதமடைந்து வெள்ள நீர் ஆலய மண்டபத்தில் உட்புகுவதன் நிமிர்த்தம் புதிய விநாயகர் ஆலயம் ஒன்றை அமைப்பதற்கு ஆலய நிருவாகமும், இவ்வூர் மக்களும் ஒன்று சேர்ந்து முடிவெடுத்தனர். அதன்படி உள்ளுர் ஆலய கட்டட வடிவமைப்பாளர்கள், தென்னிந்திய சிற்பக்கலைஞர்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு மாமல்லபுரத்தைச்சேர்ந்த ஆலய நிர்மாண ஸ்தபதி வி.சுகுமார் (னு.யு.ளு) அவர்களின் கலைநுட்ப ஆற்றலுடன் புதிதாக ஸ்ரீ சித்தி விநாயகருக்கு பிரதான ஆலயமும், பரிவார மூர்த்திகளான சிவன், உமையம்மை, முருகன், நாகதம்பிரான், வைரவர், நவக்கிரக மூர்த்திகள், சண்டேஸ்வரர், இதனுடன் சித்தானைக்குட்டி சித்தருக்கும் உள்ளக மண்டபப் பரிபாகத்தில் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாலய கட்டட நிர்மாணப்பணிகளுக்கு இவ்வூர்மக்களோடு, சகல மக்களினதும், நிதி நன்கொடை மூலம் அழகுற காட்சியளிக்கும் இவ்வாலய மகா கும்பாபிஷேகத்தை காணுவது இப்பகுதி வாழ் மக்களுக்கு கிடைத்த பேறு என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்தான் இலட்சுமணன் ஜே.பி
கோளாவில் 03
அக்கரைப்பற்று.
No comments:
Post a Comment