"இலங்கை பொலிஸ் பிரிவின் 147 ஆவது ஆண்டு நிறைவு தொடர்பான சிறப்பு பூஜை"
இலங்கையில் 03.09.1866 இல் ஆரம்பிக்கப்பட்ட பொலிஸ் பிரிவின் 147 ஆவது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வகையில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜனாப். ஹாஜா முஹைதீன் அவர்களின் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்ட விசேட பூஜை வழிபாடு, அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப் பிள்ளையார் ஆலயத்தில் கடந்த 03.09.2013, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கும், பொலிஸ்மா அதிபருக்கும் நல் ஆசிகள் வேண்டி நடாத்தப்பட்ட இப் பூஜை வழிபாட்டு நிகழ்விற்கு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் அழைப்பின் பேரில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் அவர்களும் பிரதேச செயலக ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இப் பூஜை நிகழ்வுகளை ஆலய உதவிக்குரு சிவஸ்ரீ. த.தவநீதன் அவர்கள் நடாத்தி வைத்தார்
No comments:
Post a Comment