Saturday, 29 December 2018
Wednesday, 26 December 2018
ஆழிப்பேரலையால் உயிர் நீத்த அனைத்து எம் உறவுகளுக்கும் இதய பூர்வமான அஞ்சலிகள்.
ஆழிப்பேரலையால் உயிர் நீத்த அனைத்து எம் உறவுகளுக்கும் எனது இதய பூர்வமான அஞ்சலிகள்.
இலங்கை வாழ் மக்கள் சுனாமி என்ற கடல் அரக்கனின் அழிவுகளை 2004ல் கண்டு அனுபவித்து விட்டோம் எதிர்காலத்தில் இன்றைய காலநிலை மாற்றத்தினால் ஏற்படப் போகும் இயர்கை அழிவுகளில் இருந்து மக்களின் உயிர்களை காப்பாற்றுகின்ற நடவடிக்கைகளை ஆட்சி செய்கின்ற மக்களின் அரனான அரசுகள் முன்னெடுக்க வேண்டும் இதற்கு சர்வதேசத்தின் உதவிகளையும் பெற்றுக் கொள்வது அவசிய நடவடிக்கையாகும்
Saturday, 15 December 2018
Wednesday, 12 December 2018
Sunday, 9 December 2018
Friday, 30 November 2018
, இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில், இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று, வவுணத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Thursday, 22 November 2018
Sunday, 18 November 2018
பொது மயான சிரமதானம்
சிரமதானம் நாளை 20ம் திகதி
"நாம் வசிக்கும் சூழலை தூய்மையாக வைத்திருப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில்பொது மயானத்தினை சிரமதானம் செய்வதற்கான ஏற்பாட்டு பணிகள் இடம் பெறுகின்றன
பிரதேச சபையின் அனுமதியுடன் ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டு கழகத்தின் அனுசரணையுடன் நாளை (செவ்வாய்க்கிழமை) பாரிய சிரமதான நிகழ்வு ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
Thursday, 15 November 2018
Saturday, 3 November 2018
தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கும்தான் நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுள்ளேன்
க.விஜயரெத்தினம்
கிழக்குத் தமிழர்களின் இருப்புக்கும், அரசியல் ரீதியான அபிலாஷையுடன் கூடிய எண்ணத்துடன், தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கும்தான் நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுள்ளேன் என, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சருமான எஸ்.வியாளேந்திரன் (அமல்) தெரிவித்தார்.
கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சராக பதவியை பொறுப்பேற்றமை குறித்து, இன்று (3) அவரை தொடர்புகொண்டு கேட்டபோதே, அவரை இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “நான் கிழக்குத் தமிழர்களின் நிலைப்பாட்டையும், கிழக்குத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கும், தமிழர்களுக்குத் தார்மீக நோக்கத்துடன் நல்லது செய்யவேண்டும்.
“தமிழ் மக்கள்மீது வைத்துள்ள தூரநோக்குடைய சிந்தனையின் அடிப்படையில்தான், நான் நாடாளுமன்றப் பதவியை வைத்துக்கொண்டு அமைச்சுப் பதவியை ஏற்றுள்ளேன்.
“மாறாக கதிரையை சுடாக்கி வைப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது” என்றார்.
“இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தில் தெளிவான சூழ்நிலையில் தமிழர்களை பல்வேறுபட்ட விடயங்களில் தீர்வுபெற்றுக்கொடுப்பதற்கும், அமைச்சுப்பதவியை பாரமெடுத்துள்ளேன்.
“பலர், இதைத் துரோகம் என்கிறார்களே. நான் எப்படி தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்துள்ளேன். தமிழரின் காணிகள் ஏனைய சமூகத்தால் வலுக்கட்டாயமாக பிடிக்கப்படும் போது, தன்னம்தனியாக குரல் கொடுத்தேன். அப்போது இருந்த ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
“இன்று வரை மட்டக்களப்பில் காணி பிடிக்கப்பட்டுக்கொண்டே கொண்டிருக்கின்றது. தமிழர்களின் காணிகளை யார் தடுப்பார்? காரணம் தமிழர்கள் மத்தியில் சாணாக்கியமுள்ள அரசியல் பலமில்லை.
“புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை வலுக்கட்டாயமாக அரசியல் பலத்தின்மூலம் அமைத்த போது, தனியாக நின்று, நானே எதிர்த்தேன். அப்போது ஏனையவர்கள் எங்கே போனார்கள்? கிழக்கில் இருந்தவர்கள் ஏன் இவ்விடயத்தில் மெளனமானர்கள்?
“எதிர்கட்சித் தலைவருக்கு இல்லாத அதிகாரமா? ஏன் மெளனம் காத்தார்கள்? ஒரு சத்தமிட்டாலே, நாடாளுமன்றம் கேட்கும் என்றால் ஏன் கேட்கவில்லை? மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் நன்மைக்காகவும், இருப்புக்காகவும் ஜனாதிபதியிடம் தனியாகவும், எதிராகவும், நான்தான் மகஜர் கொடுத்தேன்.
“இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புலப்படாது. எனவே, கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்மக்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் நிதானமாக சிந்தித்து செயற்படவேண்டும்.
“வரும் அரசாங்கத்தை எதிர்ப்பார்கள். ஆனால், வரவு – செலவுத் திட்டம், நம்பிக்கையில்லாப் பிரேரனைக்கு ஆதரவு கொடுப்பார்கள். இது தமிழ்மக்களுக்குச் செய்யும் துரோகமில்லையா?
“நான், அமைச்சு பதவி எடுத்தது எனது குடும்பத்துக்கல்ல. கிழக்கிலுள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது.
“தமிழ் மக்கள் மத்தியில் அபிவிருத்தி என்பதே இல்லை. நமது நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒதுக்கப்பட்ட நிதிகளில் ஒரு கிராமத்துக்கு ஒரு இலட்சம் , ஐம்பதினாயிரம் மட்டும்தான் ஒதுக்கமுடியும். ஏனைய சமூகத்துக்கு கோடிக் கணக்கில் அபிவிருத்திக்கு ஒதுக்கின்றார்கள்.
“இதற்காக நான் பல அமைச்சுக்களிடம் கை ஏந்தி அபிவிருத்திகள் செய்தேன். காரணம் தமிழ் மக்களின் தேவைப்பாடு இவ்வாறு காணப்படுகின்றது. மாகாணசபை, நகர சபைகள், பிரதேச சபைகள் என்பன தாரை வார்க்கப்பட்டுள்ளது. இது தமிழினத் துரோகமில்லையா? இதற்கெதிராக நான் மட்டும்தான் குரல் எழுப்பினேன்.
“படித்த தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வேலையில்லை. வேலை கொடுப்பதற்கு அரசியல் பலமில்லை. மாற்று சமூகத்தில் உள்ளவர்களிடம்தான் பணத்தை கொடுத்து வேலையைப் பெறவேண்டிய துர்ப்பாக்கியநிலையில் தமிழர்கள் இருக்கின்றார்கள்.
“கல்வித்தராதரம் உள்ள தமிழ் உத்தியோகத்தர்கள், அரசியல் பலமின்மையால் தட்டிக்கழிக்கப்படுகின்றார்கள். திணைக்களங்களில் நிர்வாகப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதனை தட்டி கேட்கவும், நியமிக்கவும் பலமில்லை.
“இதற்குத்தான் அமைச்சுப் பதவி தேவையாகவுள்ளது. ஒட்டு மொத்தத்தில் எதிர்க்கட்சிப் பதவியில் இருப்பதை விட அமைச்சுப் பதவி எடுத்து வேலைத்திட்டங்களைச் செய்வது சிறப்பானதாகும்.
“நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் எதுவிதக் குழப்பமும் அச்சமும் கொள்ளத்தேவையில்லை. நான் உங்களுக்கு நல்லதைச் செய்யவுள்ளேன்.
“வடக்கு மாகாணத்தில், இரண்டு அமைச்சுப் பதவிகள் கிடைத்துள்ளன. வடக்கு மாகாணத்தின் அரசியல் தலைமைகள் முன்னுதாரணமாக செயற்படுகின்றார்கள். அதேபோன்று, கிழக்கின் தமிழ் அரசியல் தலைமைகள் முனைப்புடன் செயற்படும் நம்பிக்கை உள்ளது” என்றார்.
Monday, 29 October 2018
மாதர் அபிவிருத்தி டிப்ளோமா விண்ணப்பம் கோரல்
மாதர் அபிவிருத்தி டிப்ளோமா விண்ணப்பம் கோரல்
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் நடாத்தப்படும் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் எதிர்வரும் ஜனவரி, 2019 முதல் ஆரம்பிக்கப்படவுள்ள ஒரு வருடகால மாதர் அபிவிருத்தி டிப்ளோமா பயிற்சி நெறியினைப் பயிலுவதற்காகத் தகைமையுள்ள யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
Wednesday, 17 October 2018
Saturday, 22 September 2018
41 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு
அம்பாறை, அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் உள்ளக வீதி அபிவிருத்திக்காக 41 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழி அமைச்சின் முயற்சியின் பயனாகவே இந்நிதி பாடசாலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை நிர்வாகமும் பாடசாலை அபிவிருத்தி குழுவினரும் இணைந்து அமைச்சின் இணைப்பாளரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே இத்திட்டத்திற்கான நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்மூலம், மழைக் காலங்களில் மாணவர்கள் எதிர்கொண்டுவந்த உள்ளக சீரற்ற பாதைப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மழை, வெள்ள அபாய காலங்களில் மாணவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைக்கான தீர்வுக்காணும் விடயம் தொடர்பில், பாடசாலை நிர்வாகமும் பாடசாலை அபிவிருத்தி குழுவினரும் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் தற்போதே இதற்கான உரிய தீர்வு வழங்கப்பட்டுள்ளது.haran
Thursday, 20 September 2018
Thursday, 13 September 2018
மருத்துவருக்கான மிகச் சிறந்த விருது
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி உலகெங்கிலும் உலக இயன் மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. இவ் வருடத்துக்கான Chartered Society of Physiotherapist -Sri Lanka அமைப்பின் உலக இயன் மருத்துவ தினத்தை கொண்டாடும் நிகழ்வு கொழும்பில் அமைப்பின் தலைமைச் செயலகத்தில் தலைவர் இயன் மருத்துவர் ஜாலிய உடுவெல்ல தலைமையில் இடம் பெற்ற து
Monday, 3 September 2018
Saturday, 1 September 2018
இலங்கையின் தென்மேற்கு கடற் பிரதேசத்தில் 5.2 ரிச்டர் அளவிலான நில நடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் வளிமண்டளவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
"நாட்டில் தென்மேற்கு கடற் பிரதேசத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை . வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மாலை வேலைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். ஏனைய பிரதேசங்களில் மழையற்ற சீரற்ற காலநிலை நிலவும்.
அம்பாந்தோட்டை பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வரை காணப்படும். சப்ரகமுவ, காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட பிரதேசங்களில் இதே நிலைமை காணப்படும்.
சில சந்தர்ப்பங்களில் கிழக்கு கடல் பிரதேசங்களில் இடியுடன் கூடிய பெய்யும். ஏனைய கடற் பிரதேசங்களில் மழையற்ற சீரான வானிலை நிலவும். எனினும் அம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 45 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேச கடற்பகுதிகளில் கொந்தழிப்புடன் காணப்படும்" என்றார்.
இலங்கையின் தென்மேற்கு கடற் பிரதேசத்தில் நிலநடுக்கம் !
Rating: 4.5
Diposkan Oleh:
Viveka Viveka
haran
Friday, 31 August 2018
Thursday, 30 August 2018
Wednesday, 29 August 2018
Monday, 27 August 2018
Sunday, 26 August 2018
Saturday, 25 August 2018
Friday, 17 August 2018
Wednesday, 15 August 2018
காணி மீட்புப் போராட்டம்
பொத்துவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ராகம பிரதேச மக்கள், தங்களது குடியிருப்புக் காணியை அரசாங்கம் விடிவித்து வழங்குமாறு கோரி, காணி மீட்புப் போராட்டமொன்றை, ராகம 40ஆம் கட்டையில் இரண்டாவது நாளாக இன்றும் (15) முன்னெடுத்தனர்.
அம்பாறை மாவட்ட காணி மீட்பு அமைப்பும் அம்பாறை மாவட்ட மீனவர் பேரவையும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
Thursday, 9 August 2018
Tuesday, 7 August 2018
Sunday, 5 August 2018
Saturday, 4 August 2018
Thursday, 2 August 2018
Monday, 30 July 2018
Thursday, 19 July 2018
கிழக்கு மாகாண மட்ட கராத்தே சுற்றுப்போட்டிகளில் திருக்கோவில் கல்வி வலயம் 9 பதங்கங்கள் வென்று சாதனை
கிழக்கு
மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட கராத்தே சுற்றுப்போட்டிகளில் அம்பாறை
மாவட்டத்தின் திருக்கோவில் கல்வி வலய மாணவர்கள் 6 தங்கம் அடங்கலாக 9 பதங்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)