Thursday, 13 September 2018

மருத்துவருக்கான மிகச் சிறந்த விருது

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி உலகெங்கிலும் உலக இயன் மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. இவ் வருடத்துக்கான Chartered Society of Physiotherapist -Sri Lanka  அமைப்பின் உலக இயன் மருத்துவ தினத்தை கொண்டாடும் நிகழ்வு கொழும்பில்  அமைப்பின் தலைமைச் செயலகத்தில்  தலைவர் இயன் மருத்துவர் ஜாலிய உடுவெல்ல தலைமையில் இடம் பெற்ற து

இவ் விருதினை இவ் அமைப்பின் தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்பாளர் Dr. சுஜீவ வீரசிங்க அவர்கள் வழங்கி வைத்தத்துடன் 
இலங்கை வரலாற்றிலே முதன் முறையாக மிக குறைந்த வயதில்  மிக குறுகிய காலத்தில் இயன் மருத்துவ துறையில் முதலாவது விருதை பெற்ற நபர் என்ற வரலாற்று இயன் மருத்துவர் க. ஹரன்ராஜ் பதிவையும் தனதாக்கி கொண்டார்.

Excellent upcoming Physiotherapist Award -2018) அக்கரைப்பற்று பனங்காட்டை சேர்ந்த இயன் மருத்துவர் கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ் அவர்கள் தட்டிச் சென்றார்.  இவ் விருதுக்கு இவர் தெரிவு செய்யப்பட்டமைக்கு காரணம் இவர் தனது பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த காலம் முதல் இன்று வரை இலங்கையில் இயன் மருத்துவ துறையின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு மக்களுக்கு மிகச் சிறந்த இயன் மருத்துவ சேவை வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இவரை பனங்காடு இணையத்தளம்  சார்பாக வாழ்த்துகின்றோம்


haran

No comments: