Wednesday, 17 October 2018

க.பொ.சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு

க.பொ.சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு 



கிழக்கு பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் க.பொ.சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கணித பாட கல்வி கருத்தரங்கானது ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக் கழகத்தின் கல்வி சார் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்  நடாத்தப்பட்டது 


 திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட் ட கண்ணகி கிராமம் கண்ணகி வித்தியாலயம், பனங்காடு பாசுபதேஸ்வரா வித்தியாலயம், கோளாவில் விநாயகர் வித்தியாலயம், மற்றும்  ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தயாலயம் களில் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களுக்கு நடத்தப்பட்டது 

மேலும் இக்  கருத்தரங்கிற்கு நிதி உதவி வழங்கிய நல் உள்ளத்திற்கும், கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கும், கலந்து கொண்ட பாடசாலை மாணவர்களுக்கும் அதிபர், ஆசிரியர்களுக்கும் மற்றும் சகல விதத்திலும் உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளை உதயம் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள்  தெரிவித்திருந்தத்துடன் அடுத்த மாத நடுப்பகுதியில் விசேட மருத்துவ முகாம் ஒன்றும் இலவசமாக நடாத்தப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது 


No comments: