Sunday, 26 August 2018

களுவாஞ்சிகுடியில் அரச மருந்தாக்க கூட்டுத்தாபன மருந்துகள் விற்பனை நிலையம் (ஒசுசல)


களுவாஞ்சிகுடியில் அரச மருந்தாக்க கூட்டுத்தாபன மருந்துகள் விற்பனை நிலையம் (ஒசுசல) ஒன்றை அமைத்து தருவதாக சுகாதார சேவைகள் பிரதியமைச்சர் பைசல் காசீம்  உறுதியளித்துள்ளார். 


பட்டிருப்பு தொகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான பாமர  மக்களின் நன்மைகருதி 
 இதனை அமைத்துருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக வைத்தியசாலைக்கு திடிர் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த இவர் வைத்தியசாலை அபிவித்திச் சங்கம் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுடானான கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பட்டிருப்பு தொகுதியின் தலைநகரமாக காணப்படும் களுவாஞ்சிகுடியில் இதனை அமைப்பது மிகவும் சிறந்ததென நான் நினைக்கின்றேன். பல தரப்பட்ட மருந்துகளின் விலைகள் எமது அரசாங்கத்தின் ஊடாக குறைக்கப்பட்டுள்ளது. இதனை இங்குவாழ்கின்ற மக்களும் அனுபவிக்க வேண்டும். இதற்காக நான் உடன் நடவடிக்கை எடுத்து இந்த விற்பனை நிலையத்தை அமைத்துதருவேன். 





இதற்குபொருத்தமான இடமொன்றினை களுவாஞ்சிகுடியில் பெற்றுதரும் பட்சத்தில் மிகவிரைவாக பூர்வாங்க வேலைகளை முன்னெடுப்பேன் என தெரிவித்த பிரதியமைச்சர், வைத்தியசாலை வளகத்தில் காணப்படும் இடம் இதற்கு பொருத்தமானதாக காணப்படுவதாகவும் தெரிவித்து குறித்த இடத்தினையும் பார்வையிட்டு சென்றுள்ளார். குறித்த ஒசுசல களுவாஞ்சிகுடியில் திறக்கப்படுமயின் ஒரு இலட்சத்திற்கும் மேற்படட மக்கள் இதன் ஊடாக நன்மையடைவர் என்பது குறிப்பிடத்தக்கது




No comments: