Wednesday, 17 October 2018

இளைஞர் ஒருவரின் சடலம் மீட்ப்பு


காத்தான்குடி பிரதேசத்தில் சலூன் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று  (17) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.


நாவற்குடாவை   சேர்ந்த 18 வயதுடைய வசீகரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி டெலிக்கோம் வீதியில் உள்ள சலூனில் கடமையற்றி வந்த குறித்த இளைஞர் சம்பவதினமான நேற்று  வழமைபோல கடையில் தனது வேலையைச் செய்து வந்துள்ள நிலையில் பகல் ஒரு மணியளவில் கடையின் பின்பகுதிக்கு சென்றவர் அதிகநேரமாகி திரும்பி வராததையிட்டு அங்கு சென்றபோது கடையின் கூரையில் கயிற்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் காதல் பிரச்சினை காரணமாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments: