Saturday, 29 December 2018

கஞ்சா கோப்பி விற்பனை



கஞ்சா கோப்பி விற்பனை செய்த பெண் ஒருவர் நேற்று  மாலை 06 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.




 சம்மாந்துறை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய போதை வஸ்துக்கள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ரத்நாயக்கா உள்ளிட்ட குழுவினர் நிந்தவூர் பிரதேசத்தில் கஞ்சா கோப்பி விற்பனை செய்த வீடு ஒன்றை சுற்றி வளைத்த போதே போதை வஸ்துகளுடன் பெண் ஒருவர்   கைது செய்யப்பட்டார்.


குறித்த சந்தேக நபரிடம் இருந்து 2 கிலோ கிராம் கஞ்சா கோப்பி மற்றும் பக்கட்டுக்கள் பண்ணப்பட்ட 2கிராம் நிறை உடைய கஞ்சா கோப்பி 35 பக்கட்டுக்களும் சந்தேக நபரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது.

குறித்த சுற்றி வளைப்பானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி M.K இப்னு அஸாரின் அவர்களின் மேற்பார்வையில்  இடம்பெற்றுள்ளது

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்
கஞ்சா கோப்பி விற்பனை செய்த பெண் கைது Rating: 4.5 Diposkan Oleh: Sayanolipavan Ramakirushnan

No comments: