Wednesday, 26 December 2018

ஆழிப்பேரலையால் உயிர் நீத்த அனைத்து எம் உறவுகளுக்கும் இதய பூர்வமான அஞ்சலிகள்.

ஆழிப்பேரலையால் உயிர் நீத்த அனைத்து எம் உறவுகளுக்கும் எனது இதய பூர்வமான அஞ்சலிகள்.



இலங்கை வாழ் மக்கள் சுனாமி என்ற கடல் அரக்கனின் அழிவுகளை 2004ல் கண்டு அனுபவித்து விட்டோம் எதிர்காலத்தில் இன்றைய காலநிலை மாற்றத்தினால் ஏற்படப் போகும் இயர்கை அழிவுகளில் இருந்து  மக்களின் உயிர்களை காப்பாற்றுகின்ற நடவடிக்கைகளை ஆட்சி செய்கின்ற மக்களின் அரனான அரசுகள் முன்னெடுக்க வேண்டும் இதற்கு சர்வதேசத்தின் உதவிகளையும் பெற்றுக் கொள்வது அவசிய நடவடிக்கையாகும்



உலகமே நத்தார் பண்டிகையில் களைகட்டி கொண்டாட்டங்கள் மலர்ந்து விட்ட நேரம் மக்கள் நள்ளிரவு ஆராதனையினை முடித்து விட்டு வீடுவந்து அளவளவில்  இன்புற்று காலை சிற்றுண்டிகளை பெற்றவாறு புதிய எதிர்பார்புடன் உண்டு மகிழ்ந்து கொண்டாடியிருந்தனர்  உறவினர்கள்  இல்லங்களை நாடி வருவதும்  போவதுமென  மகிழ்ச்சி வெள்ளம் தாண்டவமாடியது
 இந்துக்கள் கூட திருவெண்பாவை பூஜையினை ஆலயங்களில்  முடித்து விட்டு வீடுகளுக்கு வந்து கொண்டிருந்தனர் ஆண்கள் மற்றும் உளைக்கும் பெண்கள் தமது அன்றாட கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்

2004 டிசம்பர் 26ஆம் திகதி அதாவது கிறுஸ்மஸ் தினத்திற்கு மறுநாள் காலை 08.00மணிவரை மக்கள் தமது இயல்பு வாழ்வுகளில் ஈடுபட்டிருந்தனர் கால நிலைகூட சீராக இருந்தது 08 மணிக்கு பின்னரான காலகட்டமே மக்களின் வாழ்வுதனை தலை கிழாக புரட்டிப் போட்டது என்பது இன்றைய இளைஞர்களுக்கு சரித்திர நிகழ்வாக அமைந்து விட்டது.

இந்த சமுத்திரம் என்றுமில்லாதவாறு கொந்தளித்தது சுமார் 40 முதல் 50 மீற்றர் உயரத்திற்கு கடல் அலைகள் சுழன்று பொங்கி எழுத்தது கொடிய அரக்கனின் தோற்றத்தில் உருவெடுத்த கடற்கோள் தாமதியாது கரையேர பிரதேசங்களுக்குள் உட்புகுந்து நொடிப் பொழுதில் மக்களையும் ஏனைய உயிர் உடமைகளையும் ஈவு இரக்கமின்றி காவு கொண்டு விட்டது  இந்த கடல் பேரலையில் உயிர் தப்பிய எமது உடன் பிறாவா உறவுகள் மத்தியில் ஆறாத ரணத்தினை இது ஏற்படுத்திச் சென்றுவிட்டது

கிறுஸ்மஸ் கொண்டாட்டங்களை எதிர் நோக்கி ஆட்டம் பாட்டம் போடவிருந்த மக்களின் வீடுகளில் மரண ஓலம் பல கடற்கரை பகுதிகளில் அமைந்திருந்த வீடுகளையே காணவில்லை வீடு வாசலுடன் தோட்டம் துறவுகளையும் நீண்டு வளர்திருந்த மரம்களையும் காணமுடியாத நிலையில் மக்களை எங்கு சென்று தேடுவது .

தெற்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் 85ஆயிரம் அப்பாவி மக்கள் சில நொடிப் பொழுதில் கடல் விழுங்கிவிட்டது  கடற்கரைகளை அண்டிய பகுதிகளில் உள்ள நிலையான கட்டிடங்கள் யாவும் கடல் அலையினால் தூக்கி எறியப்பட்டு சின்னா பின்னமாக்கப்பட்டது 

இவ்வாறு அழிவுகளை ஏற்படுத்திய சுனாமி கடற்கோள் எவ்வாறூ தோற்றம் கண்டது என நோக்குகையில் எமது இலங்கை தீவிலிருந்து சுமார் இரண்டாயிரம் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சுமாத்திரா தீவின் கடலுக்கு அடியில் உருவான பூகப்பத்தால் சுனாமி பேரலை தோன்றியுள்ளது அது பொங்கி எழுந்து சீறிப் பாந்ததினால் இந்தோனேசியா, தாய்லாந்து, அந்தமான், நிக்கோபர் தீவுகள் இலங்கை இந்தியா மாலைதீவு வட ஆபிரிக்கா நாடுகள் சிலவற்றின் கரையோரப்பகுதிகளை தாக்கி அளித்துள்ளது

இலங்கை உட்பட படுமோசமாக தாக்கப்பட்ட நாடுகளில் உயிரற்ற வெற்றுடல்கள் நல்லடக்கம் செய்யப்படாமல்  குவியல் குவியல்களால் பார்க்கும் இடமெல்லாம் காணப்பட்டதனை  நேரடியாக கண்டு உணர்தவர்கள் கரையோர வாழ் மக்களே .இந்த மனித உடல்கள் உள்ளூர் மக்களால் சேகரிக்கப்பட்டு ஒரே புதைகுழியில் போட்டு அடக்கம் செய்யப்பட்டதுடன்  ஆங்காங்கே குவியல் குவியலாக இரண்டு மூன்று தினங்களிற்கு மேல் கிடந்த மனித உடல்கள் புல்டோசர்களால் சேகரிக்கப்பட்டு பாரிய கிடங்குள் வெட்டப்பட்டு புதைக்கப்பட்டது வரலாற்று நிகழ்வு
சுமாத்திராவின் வடமுனை மானிலமான அச்சே முற்று முழுதுமாக அழிவிற்குள்ளாகியது . தீவுக்கூட்டங்களில் ஒன்றினைந்த இந்தோனேசியாவில் 2004 பூகம்பத்தினால் சில தீவுகள் சுமார் 20மீற்றர் கடலுக்குள் நகர்ந்துவிட்டதாகவும் இதனால் உலக வரை படத்தில் கூட சிறிய மாற்றங்கள் ஏற்படவேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் பூகற்பவியலாளர்கள் கூறியுள்ளனர்

இலங்கையில் கடற்பேரலையினால் அம்பாறை மாவட்டமே கூடுதலான உயிர் அழிவுகள் ஏற்பட்டது அதற்கு அடுத்த படியாக காலி அம்பாந்தோட்டை மாவட்டமே உள்ளது குறிப்பிட்த்தக்கது யாழ்ப்பானம்,முல்லைத்தீவு, திருகோணமலை ,மட்டக்களப்பு மாவட்டங்களில் கனிசமான தொகையில்  சுமார் பத்தாயிரத்துக்கு அதிகமானவர்கள் மாண்டு போனார்கள் சுனாமி பேரலையினால் ஏற்பட்ட இழப்பு நெஞ்சை உறயவைக்கும் கொடுமையிலும் கொடுமை எனலாம்

 கடற்கரை மணலில் உல்லாசமாக நடைபவனியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் வெளிநாட்டு சுற்றுலாப்பயனிகள் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டிருந்த  சிறுவர்கள் தேவாலயங்களில் ஞாயிறு நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருண்டிருந்தோர் ,இந்து ஆச்சிரம்ங்களில் தமது காலை அனுஸ்டானங்களில் ஈடுபட்டிருந்த சிறுவோர் முதியோர்கள் அனைவருமே அபயக் குரல் எழுப்பிய நிலையிலேயே சுனாமி பேரலை கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது வெற்றுடல்கள் கூட கண்டுபிடிக்கப்படாமலேயே இறுதி அஞ்சலிகளை இன்றுவரை உறவுகள் நடாத்திக் கொண்டு ருகின்றார்கள்

சுனாமி அலையானது ஒருவிநாடிக்கு இருநூறு தடவை சுழல்வதால் கடலுக்குள் இருந்து மண்ணையும் ,சுரிகளையும் சுருட்டி எடுத்துக் கொண்டு கரையினை கடந்து ஊருக்குள் பிரவேசித்து விடுகின்றது
எமது இலங்கையில் சுனாமி பேரலையானது சுமார் இருநூறு மீற்றருக்கு தமது முழுமையான ஆதிக்கத்தினை செலுத்தி உள்ளது 26.12.2004 காலை 06.30க்கு ஏற்பட்ட பூகம்பம் 123 ஆண்டுகள் கழிந்து இந்து சமுத்திரத்தில் ஏற்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

கடந்த 2004 டிசம்பர் 26 கடற் கொந்தழிப்பினால் அம்பாரை மாவட்டத்தின் கடற்கரைப் பிரதேசங்களே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன இதில் பெரியநீலாவனையிலிருந்து பொத்துவீல் அறுகம்பை வரையான நீண்ட அம்பாரை மாவட்டத்தின் கடற்கரை பிரதேசங்களில் நிகழ்ந்த பெரும் தொகையான மரணங்களில் சுமார் 85 வீதமான மரணங்கள் கல்முனை பிரதேசத்திலுள்ள மருதமுனை ,பாண்டிருப்பு ,கல்முனை ,கல்முனைக் குடி சாய்ந்தமருது, காரைதீவு ஆகிய ஆறு கிராமங்களிலேயே நிகழ்துள்ளன

எஞ்சிய மரணங்கள் நிந்தவூர் ,அட்டாளைச்சேனை, ஒலுவில் , அக்கரைப்பற்று ,ஆலையடிவேம்பு சின்னமுகத்துவாரம், திருக்கோவில் ,தம்பட்டை, தம்பிலுவில் ,கோமாரி, பொத்துவீல் ,வினாயகபுரம், உமிரி அறுகம்பை, உல்லை, ஆகிய பிரதேசங்களில் நிகழ்ந்துள்ளன இந்த நிகழ்வில் 10500 இற்கும்  மேற்பட்டோர் மாண்டு போனதாகவும் சுமார் முப்பதாயிரம் (30000) அதிகமானோர் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்ட்தாகவும் கடற்கரையில் இருந்து 200 மீற்றர் தூர இடை வெளியில் அமைந்திருந்த குடியிருப்பு மனைகள் அழிவடைந்தும் பகுதியளவில் சேதமானதாகவும் பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் எம்.ஏ.நுஃப்மாந் தனது சுனாமி கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் .

மேலும் அவர் கல்முனை பிரதேசத்திலுள்ள மேற்குறிப்பிட்ட ஆறு கிராமங்களும் இலங்கையின் அதிக குடிசன அடர்த்தியான பிரதேசங்களாகும் இக்கிராமங்கள் யாவும் கடற்கரையில் இருந்து சமீபமாக அமைந்திருந்தமையே பேரழிவிற்கு காரணமாகும் இவை தவிர்க்க முடியாதவையே இவை இன்று வரை இதே நிலப்பரப்பில் இருந்து வருகின்றது 

2004.12.26 அன்று கரையோர வாழ் மக்களில் உழைப்பாளிகளை மக்கள் யாவரும் தமது நாளாந்த கடமைகளில் வீடுகளில் இருந்து ஆண்களும் ,பெண்களும் தத்தமது கடமைகளின் நிமிர்த்தம் வீடுகளிலிருந்து வெளியே சென்றுவிட வீடுகளில் குடும்ப பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் மட்டுமே எஞ்சி இருந்தனர்

இந்த நேரத்தில் கடற்கரையினை கடந்து கடலலை ஊருக்குள் வருகின்றது.. ஓடுங்கள் ஓடுங்கள் என்ற கூக்குரல் நாற்திசைகளும் கேட்கின்றது. இதை மக்கள் அவ்வளவாக பொருட்படுத்தவில்லை .இளைஞர்களும் ,சமுக ஆர்வலர்களும் படப்பிடிப்பாளர்களும் புகைப்பட ஊடகவியலாளர்களும் வீடுகளில் இருந்து அவசர அவசரமாக கடற்கரைப் பக்கமாக விரைவாக ஓடி வேடிக்கை பார்க்கின்றார்கள் முதலாவது அலை கரையினை கடந்து ஊருக்குள் புகுந்தது இது அவ்வளவு பாரிய சேதங்களை ஏற்படுத்தவில்லை சுமார் 15 நிமிட இடைவெளியில்  பாரிய அலை வானைத் தொடும்மளவு விரைந்து கரையினை நோக்கி வந்து கொண்டிருகின்றது வேடிக்கை பார்த்தவர்கள் கடல்லையில் அள்ளுட்ண்டு சென்றுவிட்டார்கள்

வீடுகள் நீரில் அள்ளுண்டு தோனியாக மாறி மிதந்து திக்கு திசையின்றி சென்று காணாமல் போய்விட்டது தாயின் மடியில் கைகளில் இருந்த பச்சிளம் குழந்தை கண்ணெதிரே கடலலை பறித்து சென்று கொண்டது

எங்கும் மரண ஓலம் மக்கள் இருந்த வீடு வாசல்களை  காணவில்லை குடும்பங்கள் திசை கெட்டு பல்வேறு பக்கமும் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள் கடலலையின் கோரப்பிடிக்குள் சிக்கி இறந்தவர்கள் போக ஏனையவர்கள் 2014.12.26 மதியத்திற்குப் பின்னர் மேட்டுப்பாங்கான உயந்த இடம்களில் ஒன்று கூடி செய்வதறியாது  தடுமாறிய வண்ணம் யார் யாரை தேடுவது என்பது தெரியாது பிரமை பிடித்த நிலையிலேயே வட கிழக்கு கரையோர மக்கள் அன்று இருந்தனர் இதன் வலி வேதனைகள் அன்று நேரிடையாக அனுபவித்தவர்களுக்கு புரியும்

அன்றைய சுனாமி பேரலையினால் கடல் அலையில் அள்ளுண்டும் திக்குத்திசை தெரியாது மூச்சடைத்து மாண்டவர்களே அதிகம் ஆனால் நடுக்கடலில் நின்ற பெரிய ஆள் கடல் மீன்பிடி படகுகள் மற்றும் அதில் பயனம் செய்தவர்களும் பத்திரமாக் கரைதிருப்பியதுடன் அந்ததருனத்தில் தாம் ஆள்கடலில் மணல் திட்டுக்களை கண்டதாகவும் தமது வள்ளம் மண்ணில் தரை தட்டி சில மணினேரங்களில் மீண்டும் நீர் மட்டம் சடுதியாக உயர்ததாதவும் அனுபவித்தவர்கள் தெரிவித்தனர்

கடல் கரைபகுதிகலில் காணப்படும் பனை மரங்கள் அலைகள் எவ்வளவு தூரத்திற்கு மேல் எழுந்துள்ளதினையும் இன்று தலை விழுந்த பனை மரங்கள் கடற்கரை பகுதிகளில் எமக்கு  கண்னூடாக கானும் காட்சியாக இருக்கின்றது .
மனித இனம் பேரவலம் ஒன்று நிகழ்தபோது சகல விதமான விருப்பு வெறுப்புகளையும் மறந்த மனித நிலைக்கு வந்து விடுவான் இதுவே நியதியும் ஜதார்தமுமாகும் சுனாமி ஏற்பட்ட போது எமது நாட்டில் கொடிய யுத்தம் நிலவிய காலகட்டம் தமிழ் மக்கள் பாதுகாப்பு படையினரைக்கண்டு ஓடி ஒழிந்த காலப் பகுதியாகும்

இதே போல் படையினர் தமிழ் பேசும் மக்கள் எவரையும் அன்றைய காலகட்டத்தில்  நம்பத்தயார் இல்லை இரு தரப்பும் இரு துருவம் ஆனால் சுனாமி அலை தாக்கி அழித்த அன்று அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கடற்கரைக்கு மிக அன்மித்ததாகவிருந்த விசேட அதிரடிப்படை முகாம் கடல் அலையினால் மிக மோசமாக தாக்கப்பட்டதுடன் படையினரையும் நிலைகுலைய வைய்த்ததுடன் படையினர் உடுத்த உடையுடன் கடல் நீர் தலையில் இருந்து சொட்ட சொட்ட தமிழ் மக்கள் வாழும் பகுதிக்கு (கண்ணகிபுரம் ) படைத்தளபாடங்களுடன் காலை 10.00 மணியளவில் வந்து சேர்ந்து கண்ணகிபுரம் பாடசாலையில் தஞ்சமடைந்தனர் படையினரின் பாதுகாப்பான வெளியேற்றத்துக்கு தமிழ் இளைஞர்கள் அன்று பேருதவி செய்துள்ளனர் .
இதே போன்று அன்றிரவு வீதியோரங்களிலும் ஆலயங்களிலும் உயரமான மலைகளிலும் உணவு நீரின்றி அல்லல் பட்ட தமிழ் மக்களுக்கு உடனடியாக சமைத்த உணவுகள் வழங்கப்பட்டனதுடன் தேவையான முதலுதவிகளும் படையினரால் வழங்கப்பட்டது இது போல அனைத்து பகுதிகலிலும் இன மத மொழி வேறுபாடு இன்றி மனிதர்களெனும் மனிதப் பண்புடன் ஒருவருக்கு மற்றையவர் உதவிக் கரம் புரிந்ததை மறக்கமுடியாத வரலாற்று உண்மை இதுவே மணித இனத்தின் அடையாளம்

சுனாமி தாக்கி அழித்த ஒருமணிநேரம் ஒவ் வொருவரும் தமது உடன் பிறப்புக்ளையும் உற்றார் உறவினர்களையும் தேடும் பணிகளிலேயே தமது அன்றைய பொழுதினை கழித்தனர் இதற்கு உதாரணமாக அலைபேசிகள் சில மணி நேரங்கள் தொடர்பு எட்டமுடியாத நிலமைக்கு தள்ளப்பட்டிருத்ததும் அந்தந்த தொலைபேசி நிறுவனங்களுக்குஒரு புதிய அனுபவத்தினை பெற்ருக் கொடுத்திருக்கும்

இத் தேடுதலானது ஒரு மாதம் வரை நீடித்ததும் வருடங்கள் கடந்தும் உள்ளது கடலலை கொண்டு சென்றவர்கள் போக ஏனொயோர் குடும்பங்களுடன் இனைந்து கொண்டனர் கடல் தாயின் மடியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்கள் இன்றுவரை கடலுக்கு அடியிலும் மண்ணில் புதையுண்டும் எம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்

இந்த கடற்சீற்றத்தால் கடலினை நம்பி ஜீவனோபாயம் நடாத்திய மீனவர்கள் அந்த சமுதாயம் பாரிய உடமை உயிர் இழப்புகளை சந்தித்துள்ளது
இதே நேரம் நத்தார் விடுமுறையுடன் தமது உறவுகளை காண பல்வேறு பரிசுப் பொதிகளுடன் பல கணவுகளுடன் கொழும்பில் இருந்து  ஹம்பாந்தோட்டை வரை சென்றும் தென் கரையோர புகைவண்டி என்று மில்லாத வாறு அதிக சன செரிசல் நிறைந்ததாக பயனித்துக் கொண்டிருந்த போது ரயில் பெரலிய என்ற இடத்தை அன்மித்த போது கடலலை ஒன்று ரயிலில் மோதியதுடன் பெட்டிகள் சின்னாபின்னமாகி கடலலையில் கடலுக்குள் இழுத்துச் சென்றிருக்கின்றது

மக்கள் கடலுடன் சங்கமமானார்கள் இந்த ரயில் விபத்தில் அதிஸ்டவசமாக  ஒரு சில பேர் தப்பித்துள்ளனர் என கூறப்படுகின்றது. இதன் இறப்பு எண்ணிக்கை குறைந்தது 1700 பேர் மற்றும் அனேகமாக 2000திற்கும் மேற்பட்டோரில்  600 உடல்களையே மீட்ப்புக் குழுவினர் கைப்பற்றி இருந்தனர்  இவ் ரயில் விபத்தே ஆசியாவில் நடந்த பாரிய பேரழிவாக கொள்ளப்படுகின்றது.

வடக்கு கிழக்கினை தாக்கிய அந்த சுனாமி அலை தென் பகுதி நகரான காலி கோட்டை வரை தமது ஆதிக்கத்தை செலுத்தி உள்ளது காலி கோட்டை சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள சகல வர்த்தக நிலையங்களும் அழிவுக்குள்ளானது


எனினும் கடந்த மாதத்தில் இடம்பெற்ற வெள்ளம் மண்சரிவுகளினை இன்னும் நாம் சரியாக வரும் முன்னர்  கணிக்க முடியாதவர்களாவே இருக்கின்றோம் என்பது கவலைதரும் விடையமே  

இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாக மனிதப் பேரவலம் ஏற்படுவதிலிருந்து தவிர்த்துக் கொள்வதுடன் நாட்டின் பொருளாதாரத்தையும் ஓர் ஸ்திரத்தன்மையில் பேனமுடியும் என்பது திண்ணம் ..

haran

No comments: