அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக ஊவாமாகாண சபையின் பிரதிப்பிரதம செயலாளராகவிருந்த பண்டாரநாயக்க
நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராகவிருந்த துசித பி வணிகசிங்கவின் இடத்திற்கே பண்டாரநாயக்க நியமிக்கபட்டுள்ளார். இவர் நாளை திங்களன்று பதவியேற்பார் எனத் தெரியவருகின்றது.
இதேவேளை காரைதீவுப் பிரதேச செயலத்தின் பதில் பிரதேசசெயலாளராகவிருந்த கந்தையா லவநாதன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளராகவும் அங்கிருந்த பிரதேசசெயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் காரைதீவு பிரதேச செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காரைதீவு பிரதேசசெயலகம் கடந்த 9மாதங்களாக நிரந்தர பிரதேச செயலாளரின்றி பதில்பிரதேசசெயலாளருடன் இயங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி இடமாற்றங்களுக்கான அங்கீகாரம் அனுமதி அனைத்தும் உரிய தரப்புகளினால் வழங்கப்பட்டுள்ளன. ஓரிருதினங்களில் இடமாற்றக்கடிதங்கள் கிடைக்கப்பெறவிருக்கின்றன.
haran
No comments:
Post a Comment