மாதர் அபிவிருத்தி டிப்ளோமா விண்ணப்பம் கோரல்
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் நடாத்தப்படும் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் எதிர்வரும் ஜனவரி, 2019 முதல் ஆரம்பிக்கப்படவுள்ள ஒரு வருடகால மாதர் அபிவிருத்தி டிப்ளோமா பயிற்சி நெறியினைப் பயிலுவதற்காகத் தகைமையுள்ள யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
ஒரு வருடகால பயிற்சிக் காலத்தினை கொண்ட இப் பாடநெறியானது எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு முதல் மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது டன் விண்ணப்பிப்பதற்கான தகைமைகளாக
விண்ணப்பதாரி 31.01.2019 ஆம் திகதியன்று 17 வயதிற்குக் குறையாதவராகவும் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரி தனது பாடசாலைக் கல்வியில் குறைந்தது தரம் - 10 இனைப் பூர்த்தி செய்தவராக இருப்பதுடன் இதனைப் பாடசாலை விலகல் சான்றிதழ் அல்லது பாடசாலை அதிபரினால் வழங்கப்பட்ட கடிதம் மூலம் உறுதிப்படுத்தப்படுத்துதலுடன்
விண்ணப்பதாரி பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக வசித்து வருபவராக இருத்தல் வேண்டும்.
இதனைக் கிராம உத்தியோகத்தர் வதிவிட அத்தாட்சிப் பத்திரம் மூலம் உறுதிப்படுத்துதல் வேண்டும்.
பிரதேச செயலகத்தில் கிராம அபிவிருத்திப் பிரிவால் தற்போது விநியோகிக்கப்பட்டுவரும் விண்ணப்பப்படிவத்தைப் பூரணப்படுத்தி எதிர்வரும் 15 ஆம் திகதியன்று, அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு தபாலுறையின் இடதுபக்க மேல் மூலையில் “மாதர் அபிவிருத்தி டிப்ளோமா பயிற்சி நெறி - 2019” எனக் குறிப்பிட்டு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், ஆலையடிவேம்பு முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
தகைமையுள்ள விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சையொன்றுக்கு அழைக்கப்பட்டு தகைமைகள், குடும்ப வருமானம், சுயதொழில் புரிதலில் கொண்டுள்ள ஈடுபாடு என்பவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்து
No comments:
Post a Comment