Friday, 17 August 2018

புதிதாக மதுபான நிலையம்,எதிர்த்து ஆர்ப்பாட்டம்





புதிதாக மதுபான நிலையம் திறப்பதை எதிர்த்து இன்று (17) அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவிற்குற்படட சின்னமுகத்துவாராம் பகுதியில் பொதுமக்களினால்  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது 


அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குற்பட்ட சின்னமுகத்துவாராம் பகுதியானது கடற்கரையினை அண்டிய இயற்க்கை எழில் மிகு பிரதேசமாகும் 

இப் பகுதியில் தற்போது புதிதாக மதுபான விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு வருவதனையும் இதற்கு அனுமதி வழங்கியமையானது எமது வளந்துவரும் இளையர் சமூகத்திற்கு மிகவும் பாதகமான சூழ்நிலையினை ஏற்படுத்தி விடுவதுடன்  
தற்காலத்தில் சுற்றுலா தாளமாக மூவின மக்களும் வந்து செல்லும் இடமாகவும் வளந்து வருகின்றது 

எனவே இவ் இடத்தில் அனுமதி வழங்கியதை கண்டித்தும் இதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும்  "எமது பகுதியினை சுடுகாடாக மாற்றாதே" ,"மக்களின் சேமிப்பை கரைக்காதே " ,ஜனாதிபதியே   அனுமதியினை இரத்துச்செய் " அரசே வீட்டுக்கு வீடு மதுபான சாலை திறப்பதா உனது கொள்கை " ,"மது வரி திணைக்கள அதிகாரிகளே உங்கள் தவறு உங்களுக்கு தெரியவில்லையா " போன்ற மகுட வாசகங்களை  இவ் ஆர் ப்பா ட் டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஏந்தியவாறு காணப்பட்டனர் 

இவ் அர்ப்பட்டத்தில் பிரதேச செயலாளர் கலந்து கொள்ளவில்லை என்பதுடன் அக்கரைப்பற்று பொலிஸார் நிலைமையினை அவதானியத்தவாறு வீதியின் இருமருங்கிலும் நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது 

No comments: