Thursday, 30 August 2018

ஆயுதங்கள் மீட்பு


மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சில்லிக்கொடியாறு பாலத்திற்கு அருகில் இருந்து குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

ரி56 ரக துப்பாக்கிகள் மூன்றும் அதற்குரிய மகசின்கள் ஐந்தும் ஒரு குழியில் பொலித்தீன் பைகளினால் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கும் கொக்கட்டிச்சோலை பொலிஸார், இது தொடர்பில் அப்பகுதியில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் ஆயுதங்கள் மீட்பு Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka
haran

No comments: