Saturday, 15 December 2018

வன்முறையை இல்லாதொழிப்போம்


பா.மோகனதாஸ்

பெண்களுக்கெதிரான வன்முறையை இல்லாதொழிப்போம் பதினாறாம் நாள் செயற்திட்டத்தில்
சுவரொட்டிகளை பொது இடங்களில் காட்சிப்படுத்தும் நிகழ்வு, கல்முனை பூராகவும் நேற்று(14) இடம்பெற்றது.



அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சுமார் 250 க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டதுடன் ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்களில் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையம் உட்பட சமூகமட்டக் அமைப்புகள் ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.








haran

No comments: