காத்தான்குடியில், ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர், 50,000 ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில், நேற்று (28) விடுவிக்கப்பட்டார்.
பிராந்திய ஊடகவியலாளரும் காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளருமான எம்.எஸ்.முஹகம்மட் சஜியின் வீட்டுக்குள், ஞாயிற்றுக்கிழமை (26) நுழைந்த ஒருவர், அவருக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. அலைபேசி மூலமாகவும், இந்த அச்சுறுத்தலை அவர் விடுத்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, குறித்த சந்தேகநபர், நேற்று முன்தினம் (27) கைது செய்யப்பட்டிருந்தார்.haran
No comments:
Post a Comment