Saturday, 22 September 2018

41 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு




அம்பாறை, அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் உள்ளக வீதி அபிவிருத்திக்காக 41 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழி அமைச்சின்  முயற்சியின் பயனாகவே இந்நிதி பாடசாலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை நிர்வாகமும் பாடசாலை அபிவிருத்தி குழுவினரும் இணைந்து அமைச்சின் இணைப்பாளரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே இத்திட்டத்திற்கான நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்மூலம், மழைக் காலங்களில் மாணவர்கள் எதிர்கொண்டுவந்த உள்ளக சீரற்ற பாதைப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மழை, வெள்ள அபாய காலங்களில் மாணவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைக்கான தீர்வுக்காணும் விடயம் தொடர்பில், பாடசாலை நிர்வாகமும் பாடசாலை அபிவிருத்தி குழுவினரும் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் தற்போதே இதற்கான உரிய தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
haran

No comments: