இலங்கையின் தென்மேற்கு கடற் பிரதேசத்தில் 5.2 ரிச்டர் அளவிலான நில நடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் வளிமண்டளவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
"நாட்டில் தென்மேற்கு கடற் பிரதேசத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை . வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மாலை வேலைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். ஏனைய பிரதேசங்களில் மழையற்ற சீரற்ற காலநிலை நிலவும்.
அம்பாந்தோட்டை பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வரை காணப்படும். சப்ரகமுவ, காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட பிரதேசங்களில் இதே நிலைமை காணப்படும்.
சில சந்தர்ப்பங்களில் கிழக்கு கடல் பிரதேசங்களில் இடியுடன் கூடிய பெய்யும். ஏனைய கடற் பிரதேசங்களில் மழையற்ற சீரான வானிலை நிலவும். எனினும் அம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 45 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேச கடற்பகுதிகளில் கொந்தழிப்புடன் காணப்படும்" என்றார்.
haran
No comments:
Post a Comment